சிலமாதங்களிற்கு முன்னர் லண்டனில் எங்கள் ஆசிரியர் தொழிலை கைவிட்டு விட்டு இலங்கை வந்து இங்கு வாழ ஆரம்பித்தோம் - தொழில்புரிய ஆரம்பித்தோம்.
வெவ்வேறு பட்டப்படிப்புகளில் ஈடுபட்டிருந்தவேளை நாங்கள் பல்கலைகழக கழகத்தில் சந்தித்தோம் நான் 21 வயதில் ஆசிரியப்பணியில் இணைந்ததும் பெருந்தொற்று காலத்தில் வேறு வேலைவாய்ப்புகள் இல்லாததால் எனது மனைவியையும் ஆசிரிய தொழிலில் ஈடுபடவைத்தேன் .
நாங்கள் இருவரும் ஒரேபாடசாலையில் கணிதபாடத்தை கற்பித்தோம் மனைவியின் பெற்றோர் பாடசாலைக்கு அருகிலேயே வசித்ததால் நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கவேண்டிய நிலை ஏற்படவில்லை.. அச்சம் தரும் வாடகையை செலுத்தவேண்டிய நிலையேற்படவில்லை.
ஆசிரியராக பணிபுரிந்த இறுதிவருடத்தில் நான் 40000ஸ்டேர்லிங் பவுண்ட்களை உழைத்தேன்.
எனது மனைவி கற்றல் அனுபவம் குறைந்தவர் என்ற போதிலும் வரிகள் போன்றவற்றை செலுத்திய பின்னர் மாதாந்தம் 2000 ஸ்டேர்லிங் பவுண்ட்களை உழைத்தார்.
கடந்த வருடம் லண்டனில் ஆசிரியர்களின் சம்பளம் குறித்து கடும் விவாதம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது எனினும் வாடகை வீட்டில் வசிக்காததால் எங்களால் சிறியளவு பணத்தை சேமிக்க முடிந்தது.
ஐந்து வருட ஆசிரிய தொழிலிற்கு பின்னர் அரசாங்க உத்தியோகம் சுமையாக தோன்றியதால் நாங்கள் புதிய சாகசத்தில் ஈடுபடதீர்மானித்தோம்.நாங்கள் களமிறங்கி இலங்கைக்கு புறப்பட்டோம்.
எங்கள் சொந்த கல்வி முயற்சியை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் இலங்கைக்கு புறப்பட்ட நாங்கள் இளவயதினருக்கான நன்கொடை அமைப்பொன்றை உருவாக்க திட்டமிட்டோம்.
இதற்காக நாங்கள் இலங்கையில்ஆசிரியர் ஒருவர் சாதாரணமாக பெற்றுக்கொள்ளும் ஊதியத்தை பெற திட்டமிட்டோம்.
லண்டனில் நாங்கள் பெற்ற சம்பளத்தை விட இது பல மடங்கு குறைவானது என்ற போதிலும் ஆனால் லண்டனில் கிடைக்காத தனிப்பட்ட தொழில்சார் சுதந்திரம் கிடைத்தது.மேலும் எங்களின் தார்மீக நோக்கங்களிற்கு இலங்கை பொருந்தியது.
மேலும் இலங்கை மிகவும் செலவு குறைந்த நாடு இதன் காரணமாக பவுண்ட்களுக்கு பெறுமதி அதிகம் மேலும் நாங்கள் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மீள்வதற்காக 3000பவுன்ட்களை சேமிக்க திட்டமிட்டோம்.
https://www.telegraph.co.uk/money/consumer-affairs/how-i-spend-my-money-migrate-sri-lanka-teaching/
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM