கரகம்பிட்டியிலிருந்து ஹெட்டியாவத்தைக்குச் செல்லும் தனியார் பஸ்ஸின் சாரதி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் மூவரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை (03) காலை ஐந்து மணியளவில் பஸ்ஸை சுத்தம் செய்து கொண்டிருந்த நடத்துனரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
காயமடைந்தவர் நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த அசேல ஜோசப் என்ற 23 வயதடையவர் என்பதுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த விடயம் தொடர்பில் இவர்கள் பழிவாங்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் தாக்குதலை நடத்திய நபர்கள் உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் எனவும் இவர்கள் பழிவாங்கும் நோக்கிலேயே தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரண்டு வாள்கள் மற்றும் கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் நுகேகொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு மிரிஹான தலைமைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM