(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் பல்வேறு காரணிகளினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது. ஆட்சிமாற்றம் அவசியமானது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் கல்வித்துறை பல்வேறு வழிமுறைகளில் பாதிக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கல்வித்துறைமை மேம்படுத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பாடத்திட்டங்களை நிறைவு செய்வது முழுமையடையவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளும் கொவிட் பெருந்தொற்று என்பதொன்று இருக்கவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித் துறை தொடர்பில் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இந்த முன்மொழிவுகள் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் குறிப்பிடப்பட்டன.ஆனால் எவையும் செயற்படுத்தப்படவில்லை.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியில் இருந்து மாணவர்கள் குறிப்பாக ஆண் மாணவர்கள் இடைவிலகும் வீதம் அதிகரித்துள்ளன. பெரும்பாலான பல்கலைகழகங்கள் இலாபமடையும் நோக்கத்துடன் செயற்படுகின்றன.நிர்வாக கட்டமைப்பின் மோசடியால் மாணவர்கள் தான் இறுதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது,ஆனால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை.ஆகவே இந்த அரசாங்கத்தினால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது.ஏனெனில் அரசாங்கம் ஒரு புறம் செல்கிறது,மக்கள் பிறிதொரு புறம் செல்கிறார்கள்.ஆகவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆட்சிமாற்றம் அவசியமானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM