இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்கால நிர்வாகத்தை நியமிப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இதனுடன் சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமது கட்சிக்காரரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு கால அவகாசம் தேவை என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி வழக்கு விசாரணை இம்மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அன்றைய தினம் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM