வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கு மற்றும் அவர்களது ஒட்டுமொத்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கான யோசனைகளை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சொத்துக்களை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பிலும் யோசனை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில், 
யுத்தகாலம் வட கிழக்கில் இடம்பெயர்ந்த  மக்களை மீளக் குடியேற்றுவது தொடர்பில் இவ்வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 
இதன்போது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்தார்.
இக் குழுவிற்கு எமது யோசனைகளை முன்வைத்துள்ளதோடு அதனை அமைச்சரவை  அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.