நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கான கொடுப்பனவுத் தீர்வை மக்கள் வங்கி வழங்குகிறது: டிஜிட்டல் சௌகரியத்தில் ஒரு முன்னேற்றம்

05 Dec, 2023 | 12:50 PM
image

நவீனமயமாக்கல் மற்றும் சௌகரியத்தை நோக்கிய ஒரு புத்தாக்க நடவடிக்கையாக, நீதி அமைச்சுக்கான கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளும் அதிநவீன தீர்வை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதாக மக்கள் வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கான முயற்சியானது, கடனட்டைகள் மற்றும் டெபிட் அட்டைகள் போன்ற டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் மூலம் நீதிமன்றங்களால் விதிக்கப்படும் அபராதங்களை தங்குதடையின்றிச் செலுத்த பொதுமக்களுக்கு இடமளிக்கிறது.

இந்த புத்தாக்கமான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் புரிந்துணர்வு உடன்படிக்கையானது 2023 நவம்பர் 30 ஆம் திகதியன்று அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது கைச்சாத்திடப்பட்டது. அமைச்சின் செயலாளர் திருமதி வசந்த பெரேரா மற்றும் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா ஆகிய மதிப்பிற்குரிய அதிகாரிகள் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்நிகழ்வில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ. (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் கௌரவ. அனுராத ஜயரத்ன மற்றும் மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மக்கள் வங்கிக்கும் நீதி அமைச்சுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் அரச சேவை ஆகிய துறைகளில் ஒரு பாரிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இந்த டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வைச் செயல்படுத்துவது, சட்டத் துறையில் நெறிப்படுத்தப்பட்ட மற்றும் பயனர் நேய செயல்முறைகளுக்கு அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், அபராதம் செலுத்துவது பொதுமக்களுக்கு சிரமமில்லாத ஒரு அனுபவமாகவும் அமைகிறது.

புதிய கொடுப்பனவுத் தீர்வின் முக்கிய அம்சங்கள்:

⦁ டிஜிட்டல் சௌகரியம்: கடன் மற்றும் டெபிட் அட்டைகள் போன்ற பிரபலமான டிஜிட்டல் கொடுப்பனவு வழிமுறைகளைப் பயன்படுத்தி, இப்போது தங்கள் நீதிமன்ற அபராதங்களை பணத்தை எடுத்துச் செல்லாமல், உடனடியாகவும், சௌகரியமாகவும் செலுத்த முடியும்.

⦁ மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை: புதிய கட்டமைப்பானது பணம் ஏற்றுக்கொள்ளும் செயல்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது.

⦁ செயல்திறன்: டிஜிட்டல் வழிமுறைகளின் அனுகூலத்தின் துணையுடன், இக்கொடுப்பனவுத் தீர்வு அபராதம் செலுத்துவதற்கான செயலாக்க நேரத்தை கணிசமாகக் குறைப்பதுடன், திறன்மிக்க நீதி கட்டமைப்புக்கு பங்களிக்கிறது.

⦁ பாதுகாப்பான பரிவர்த்தனைகள்: அனைத்து பரிவர்த்தனைகளும் மிகவும் பாதுகாப்பானவை, இதனால் முக்கியமான நிதித் தகவல் பாதுகாக்கப்படுகிறது.

அமைச்சர் கௌரவ. (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள், நிகழ்வில் உரையாற்றுகையில், “பொதுமக்கள் நீதித்துறை கட்டமைப்புடன் தொடர்பு கொள்ளும்போது அவர்களுக்கு அதிகபட்ச சௌகரியத்தை வழங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான பற்றுறுதியுடனான திட்டங்களை நாங்கள் கொண்டுள்ளோம். மக்கள் வங்கியுடனான இந்த ஒத்துழைப்பு அந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். மேலும் இதுபோன்ற பல முயற்சிகளை நாங்கள் விரைவில் செயல்படுத்த உள்ளோம். சாட்சிகளுக்கு அதிக வசதியை வழங்குவதற்காக நீதிமன்றங்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இடத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ஷ அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “பொதுமக்கள், அரசாங்க சேவைகளுடன் தொடர்புகொள்ளும் போது உயர் மட்டத்திலான வசதிகளை அனுபவிப்பதற்கு இடமளிப்பதில் இத்தகைய அதிநவீன தொழில்நுட்பற்களை அரசாங்க நிறுவனங்கள் பின்பற்றுகின்றமை பெரும் பங்கு வகிக்கின்றது. கொடுப்பனவு தெரிவுகள் கிடைக்கப்பெறுகின்றமை, பௌதீகரீதியான கொடுப்பனவு மையங்களில் நீண்ட வரிசைகளைக் குறைப்பதற்கு வழிவகுத்துள்ளதுடன், காத்திருக்க வேண்டிய நேரத்தை குறைத்து, ஒட்டுமொத்த சேவையின் திருப்தியை அதிகரிக்கிறது. அரசாங்க நிறுவனங்களுடனான மக்கள் வங்கியின் கூட்டு முயற்சியின் வெற்றியானது எதிர்கால கூட்டாண்மைகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும், நிதி நிறுவனங்களுக்கும் அரச துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் திறனுக்கான வாய்ப்பையும் எடுத்துக்காட்டுகிறது,” என்று குறிப்பிட்டார். 

அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா தெரிவிக்கையில், “பொது மக்கள் கடன் மற்றும் டெபிட் அட்டைகள் மூலம் கொடுப்பனவு செலுத்தும் வகையில் நீதிமன்றங்களில் கொடுப்பனவு ஏற்பு (POS) இயந்திரங்களை நடைமுறைப்படுத்தியதன் பின்னர், பொதுமக்களின் மகத்தான வசதிக்காக இணைய வழி கொடுப்பனவு மற்றும் பொது விரைவுக் குறியீடு (QR) கொடுப்பனவு வசதிகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் வங்கிக்கும் அமைச்சுக்கும் இடையிலான இந்த கூட்டு முயற்சியானது மிகவும் திறமையான நிதி முகாமைத்துவத்தை உறுதி செய்யும் என்பதுடன், குடிமக்கள் தங்கள் நிதிக் கடப்பாடுகளை உடனடியாக நிறைவேற்ற ஊக்குவிக்கும்,” என்று குறிப்பிட்டார். 

இந்த மதிப்பு கூட்டுதலை அறிமுகப்படுத்துவதில் வங்கியின் வகிபாகம் குறித்து கருத்து தெரிவித்த மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள், “புத்தாக்கமான டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளுக்கு பெயர் பெற்ற மக்கள் வங்கி, அரசாங்கம் கொடுப்பனவுகளை நிர்வகிக்கும் முறையை மாற்றியமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. நிதியியல் தொழில்நுட்பத்தில் தனது நிபுணத்துவத்தின் அனுகூலத்துடன், வேகமான, பாதுகாப்பான மற்றும் பயனர் நேய கொடுப்பனவு செலுத்தும் முறைகளை நிறுவ பல அரசு நிறுவனங்களுடன் வங்கி இணைந்துள்ளது. பல்வேறு கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்தி வரிகள், அபராதங்கள், கட்டணங்கள் மற்றும் பிற கொடுப்பனவுகளை வசதியாகச் செலுத்துவதற்கு குடிமக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட அந்த முயற்சியின் மற்றொரு எடுத்துக்காட்டு இதுவாகும்,” என்று குறிப்பிட்டார். 

தானியங்கு முறையிலான கொடுப்பனவு ஏற்பு முறைகள் அரசு ஊழியர்களின் நிர்வாகச் சுமையை கணிசமாகக் குறைக்கின்றன. இலத்திரனியல் முறையில் கொடுப்பனவுகளை செலுத்துவதன் மூலம், கைமுறையாகப் பணம் கையாளுதல், தரவு உள்ளீடு மற்றும் கணக்கிணக்கப் பணிகள் குறைக்கப்பட்டுள்ளதுடன், முக்கியமான பணிகளுக்கு மதிப்புமிக்க நேரத்தையும் வளங்களையும் உபயோகப்படுத்துவதற்கு வழிகோலுகின்றன. மேலும், டிஜிட்டல் கொடுப்பனவுச் சூழல் கட்டமைப்பு மதிப்புமிக்க தரவு நுண்ணறிவுகளை உருவாக்குவதுடன், அவை தகவலறிந்த தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படலாம். கொடுப்பனவுப் போக்குகள், உச்ச பரிவர்த்தனை நேரங்கள் மற்றும் விருப்பமான கொடுப்பனவு முறைகள் ஆகியவற்றை அரசாங்கங்கள் பகுப்பாய்வு செய்யலாம்.

1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கியானது, ரூபா 3.0 டிரில்லியனுக்கு கிட்டிய திரட்டிய சொத்துக்களுடன் நாட்டின் இரண்டாவது பாரிய நிதிச் சேவை வழங்குனராகும். தற்போது, வங்கிக்கு நாடளாவிய ரீதியில் 747 கிளைகள் மற்றும் சேவை மையங்கள் உள்ளன என்பதுடன், 14.7 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. மக்கள் வங்கியில் ; ATM  மையங்கள், CDM  மையங்கள் மற்றும் CRM மையங்கள் உள்ளடங்கிய 290 விசேட வங்கிச்சேவைப் பிரிவுகள் (SBU) உள்ளதுடன், வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் தங்கள் வசதிக்கேற்ப வங்கிச்சேவையை மேற்கொள்ள அவை இடமளிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பான் ஏசியா வங்கி 2023 நிதியாண்டில்...

2024-02-26 16:45:55
news-image

புரத தினம் 2024: இவ்வருடத்தின் எண்ணக்கரு...

2024-02-26 16:58:38
news-image

Sun Siyam பாசிக்குடாவில் உள்நாட்டவர்களுக்காக விசேட...

2024-02-26 16:58:18
news-image

ரெடிஸன் ஹோட்டல் கொழும்பில் பொம்பே நைட்ஸ்...

2024-02-21 16:36:47
news-image

டிஜிட்டல்‌ மயமாக்கத்துடன்‌ வாடிக்கையாளர்‌ சேவையை மேம்படுத்த...

2024-02-21 09:41:04
news-image

அகில இலங்கை மும்மொழி கட்டுரைப் போட்டி...

2024-02-20 14:58:28
news-image

மக்கள் வங்கியின YouTube ஊக்குவிப்பு சீட்டிழுப்பின்...

2024-02-16 13:37:55
news-image

Fentons Limited, Hayleys Fentons Limited...

2024-02-15 21:19:41
news-image

20 டைவ்களை நிறைவுசெய்த ஜோன் கீல்ஸ்...

2024-02-15 21:20:51
news-image

தேசிய தர விருது விழாவில் இலங்கை...

2024-02-14 11:09:37
news-image

ஸ்ரீ லங்கா காப்புறுதி ஒரு புதிய...

2024-02-12 18:00:39
news-image

கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான எதிர்பார்ப்புடன்...

2024-02-11 21:36:52