மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 4 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (4) உத்தரவிட்டார்.
கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி கிரான் பிரதேசத்திலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடத்தினை அலங்கரித்த கொடிகள், கம்பங்கள், ஜெனரேற்றர், ஒலி பெருக்கி என்பவற்றை கழற்றி வாகனத்தில் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு திரும்பினர்.
இதன்போது சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டாளரும் முன்னால் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நிதர்சன் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி காஞ்சிநிதி, ஒலிபெருக்கி உரிமையாளரான 43 வயதுடைய பிரான்சிஸ் அன்ரனி நியூட்டன் , அவரது மகனான 19 வயதுடைய நியூட்டன் சதுர்சன், வாகனசாரதியான 33 வயதுடைய சண்முகநாதன் நவஜீவன் ஆகிய 4 பேரையும் தடைசெய்யப்பட்ட புலிகளின் பாடல் ஒலிபரப்பு செய்தமை பெயர் பொறித்த பதாதைகள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தில் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் நவம்பர் 28 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை டிசம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM