(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாடு வங்குரோத்தாகுவதற்கும் கிரிக்கெட்டின் அழிவுக்கும் ஊழல்தான் காரணம். அதனால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் மோசடி தொடர்பில் தடயவியல் கணக்காய்வு அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டவன் என்ற வகையிலும், கிரிக்கெட் ரசிகராகவும்,220 இலட்சம் பேரும் கிரிக்கெட் விளையாட்டை விரும்புகின்றனர். நாட்டு மக்களால் விரும்பப்படும் விடயம் என்பதனால் இது தொடர்பில் பேசுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை .
கிரிக்கெட் தொடர்பில் குசலா சரோஜனி அறிக்கை, சித்ரசிறி அறிக்கை, கணக்காய்வு அறிக்கைகள் உட்பட 3 அறிக்கைகள் இருந்தாலும்,அவற்றுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைகளில் கிரிக்கெட்டில் நிலவும் குறைபாடுகள்,ஊழல்,மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விடயங்கள் உள்ளன. இது குறித்து பேச உரிமை இருக்கிறது..ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களிடம் ஊழலைப் பற்றி பேசுவது தவறு.
நாடு வங்குரோத்தாகுவதற்கும் கிரிக்கெட்டின் அழிவுக்கும் ஊழல்தான் காரணம். இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெறும் ஊழலுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து தீர்மானங்களுக்கு இணக்கப்பாடு அளித்தனர். ஆனால் இதற்கு உதவிய அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. கிரிக்கெட் திருடர்கள் இப்போது நன்றாக ஆடிவருகின்றனர்.
கிரிக்கெட் நிறுவனத்திற்கு பணம் கிடைப்பது வீரர்கள் மற்றும் ரசிகர்களாலேயாகும். என்றாலும்,தம்மால் தான் பணம் கிடைப்பதாக கிரிக்கெட் நிர்வாகம் நினைத்துக்கொண்டிருக்கிறது. இது யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ராஜபக்ஷ் குடும்பம் நாட்டை எழுதிக் கொடுத்தது போன்று நினைப்பதை ஒத்த கதை.
எனவே இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு தடயவியல் கணக்காய்வு அறிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கிறேன். மிஸ்டர் க்ளீன் என்று அழைக்கப்படும் ஜனாதிபதியால் இதை மேற்கொள்ள முடியும். இதனை மேற்கொண்டு அரசியல் மயமாக்கல் முற்றாக நீக்கப்பட வேண்டும்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு முறைப்பாடு செய்ததன் விளைவாகவே கிரிக்கெட் தடை செய்யப்பட்டது, இந்நாட்டு குடிமக்கள் சர்வதேச சமூகத்திற்கு கடிதம் எழுதி, நாட்டில் கிரிக்கெட்டை தடை செய்ய உரிமையில்லை. இது தொடர்பாக தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் விசாரணை நடத்த வேண்டும்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த மக்கள் ஆணையால் வரவில்லை. 68 இலட்சம் மக்கள் ஆணையால் வந்தவர். அவ்வாறு 68 இலட்சத்தால் வந்தவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் திருட்டு மோசடிகளை அம்பலப்படுத்தியதால் தான் அவர் வீட்டிற்கு செல்ல நேரிட்டார். அவர் வீட்டிற்கு சென்றாலும், மனித இம்யூனோகுளோபின், புற்றுநோய் மருந்துகளால் திருடிய அமைச்சருக்கு வேறு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. ரொஷான் ரணசிங்க வீட்டுக்கு அனுப்பப்பட்ட போதும் அவர் பொது மக்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்களிடமே சென்றுள்ளார் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM