கிரிக்கெட் சபை மீதான தடை வெகுவிரைவில் நீக்கப்படும் - விளையாட்டுத்துறை அமைச்சர் உறுதி

05 Dec, 2023 | 08:57 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கை கிரிக்கெட் சபை மீது விதிக்கப்பட்டு தடையை வெகுவிரைவில் நீக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சை எனக்கு வழங்கி பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சவால்களை வெற்றிக் கொள்வேன்  என விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (04)  இடம்பெற்ற விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சு ஆகியன மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

காணி மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய அமைச்சுக்களை சிறந்த முறையில்  நிர்வகித்துக் கொண்டிருந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சு என்ற பாரிய சுமையும் தற்போது வழங்கப்பட்டுள்ளது,சவால்களை கண்டு அச்சமடைய போவதில்லை.

கிரிக்கெட் சபையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்ற என்பதை ஏற்றுக் கொள்கிறோம். சகல பிரச்சினைகளுக்கும் சட்டத் திருத்தம் ஊடாக தீர்வு எட்டப்படும்.

கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது, வெகுவிரைவில் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

விளையாட்டுத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்பட வேண்டும்.கிரிக்கெட் விவகாரத்தில் எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கியதை போன்று  பொருளாதார மீட்சிக்கும் எதிரணி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“ஹரக் கட்டா” சி.ஐ.டியிலிருந்து தப்பிச் செல்வதற்கு...

2025-02-19 14:48:56
news-image

போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட ஜீப்...

2025-02-19 14:25:20
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்குப் பின்னால்...

2025-02-19 14:24:32
news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 14:40:07
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53