துஷ்பிரயோகத்துக்குள்ளாகும்  சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும் - சஜித்

Published By: Vishnu

04 Dec, 2023 | 10:13 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச மற்றும் தேசிய இணக்கப்பாடுகள் இருந்தாலும்,அவை முறையாக செயற்படுவதில்லை.

அத்துடன்  துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) இடம்பெற்ற  அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைசுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் வறுமையை ஒழிப்பதற்கும்,வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கும் பெண்களின் பங்கு முதன்மையாக இருக்க வேண்டும் பொருளாதார அபிவிருத்தியில் பெண்கள் முன்னோடியாக மாற வேண்டும். மகளிர் உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.

தேர்தல் காலப்பிரவில் பெண்களுக்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் என பேசப்பட்டாலும், இன்னும் பெண்களுக்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவில்லை. இதற்கென தனியான ஜனாதிபதி செயலணி நிறுவப்படும் என்று பேசப்பட்டாலும் அவ்வாறான விடயம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது தெரியாமல் உள்ளது.

அத்துடன் பெண்களின் உரிமைகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச மற்றும் தேசிய இணக்கப்பாடுகள் இருந்தாலும்,

அவைகள் நடக்கின்றனவா என்பதில் பிரச்சினை இருக்கிறது. துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகள் நீதிமன்றத்திற்குச் சென்ற பிறகு, அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட தரப்பினருடன் ஒன்றாக உட்கார வேண்டியுள்ளனர்.இந்த முறைமையை மாற்றி, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் .

நாட்டின் வங்குரோத்து நிலையில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக உரிமைகள் மீறப்பட்டுள்ளன. தேர்தலின் போது இது குறித்து பேசினாலும்,இது உண்மையில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது சிக்கலாகவே உள்ளது. 

மேலும் தாய் சேய் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்தும் தேசிய போசணைக் கொள்கை நாட்டுக்கு அவசியம். கோவிட் மற்றும் வங்குரோத்து நிலைக்குப் பிறகு,தாய் சேய் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து சரியான கணிப்பீடு நடத்தப்படவில்லை. பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து கணிப்பீடு நடத்தப்படவில்லை. இத்தரப்பினர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.தே கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து...

2025-02-16 16:08:26
news-image

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

2025-02-16 16:16:53
news-image

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள்...

2025-02-16 15:51:07
news-image

விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே...

2025-02-16 15:32:21
news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48
news-image

கனேடிய தூதுவருக்கும் இலங்கை தமிழரசு கட்சி...

2025-02-16 14:20:18
news-image

தேர்தலை பிற்போடுமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்...

2025-02-16 14:15:55
news-image

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின்...

2025-02-16 14:05:16
news-image

வரவு செலவுத் திட்ட இறுதி வரைவு...

2025-02-16 13:22:29
news-image

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம்...

2025-02-16 12:59:41
news-image

பஹளவெம்புவ பகுதியில் மோட்டார் சைக்கிள் -...

2025-02-16 12:57:40
news-image

நெல்லின் உத்தரவாத விலையால் விவசாயிகள் நன்மையே...

2025-02-16 12:55:32