மேஷம்
விரும்பிய காரியத்தை செய்துவிடத் துடிக்கும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம குருவும் ஏழாமிடத்தில் சுக்கிரனும் ராசியை பார்ப்பதால் திருமண காரியம் விரைவில் நடக்கும்.
இனி அட்டம ஸ்தானத்தில் ராசிநாதனுடன் பஞ்சமாதிபதி இணைவு பெறுவது பெண்களுக்கு நல்லதல்ல. கணவன் உடல் நலனில் சிரமங்கள் உண்டாகும். தனித்தன்மையை நிலைநாட்ட முயற்சிப்பீர்கள்.
கவலை தந்துவந்த கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். தனிப்பட்ட விரோதங்களால் பிரிந்திருந்த சிலர் உங்களை வந்து சந்தித்து இணைந்து பேசுவார்கள். புதிய திட்டங்களை சில நாட்கள் தள்ளிப்போடவும். பாதுகாப்புத் துறையினரின் காரியம் சிறப்பாக அமையும்.
தொழிலில் திடீர் வியாபார வளர்ச்சி உண்டாகும். அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். மன மகிழ்ச்சியுடன் செயற்படுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 11-12-2023 திங்கள் அதிகாலை 06.09 முதல் 13-12-2023 புதன் பகல் 12.17 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், இளம் பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, திங்கள்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை ராகு காலத்தில் நவக்கிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தயிர் அன்னம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் வெற்றியை தரும்.
ரிஷபம்
குடும்பத்தை திறம்பட நடத்தி வரும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு விரய குருவும், பஞ்சம ஸ்தானத்தில் கேதுவும் அமர்வது நல்லதல்ல. என்றாலும் கைக்கு கிடைத்ததை அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகும் என்பதால் எந்தக் காரியமாக இருந்தாலும் அதனை திறம்படச் செய்ய, முன் ஏற்பாடுகளையும், தொடர்ந்து அதை பற்றிய செயற்பாடுகளையும் கவனித்துச் செல்வது நல்லது.
குறைகளைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை செயற்படுத்துங்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பேச்சாற்றல், முகத் தெளிவு போன்றவற்றின் மூலம் எதிர்ப்பு குறையும்.
உங்களின் செயற்பாடுகள் பலரிடத்தில் வசீகரம் ஈர்ப்பை உண்டாக்கும். தொழிலில் சில தடைகள் நீங்கி சுபீட்சம் பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 13-12-2023 புதன் பகல் 12.18 முதல் 15-12-2023 வெள்ளி மாலை 04.25 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, பலவர்ணப் பூ வைத்து, தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் நன்மை தரும்.
மிதுனம்
வாழ்க்கைக்கு தேவையானவற்றை சரியாகத் தெரிவு செய்யும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசி ஸ்தானத்தில் குரு அமர்ந்து குரு வீட்டில் ராசிநாதனைப் பார்வையிடுவதும் மிகப் பெரிய நற்பலன்களைப் பெற்றுத் தரும்.
உங்களின் தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தருவார். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் தீரும். திருமண காரியம் சிலருக்கு கைகூடும். வேலை தேடுபவருக்கு நல்ல வேலை கிடைக்கும்.
முதலீடு இல்லாத கமிஷன் தொழில் சிறப்பாக அமையும். சிலருக்கு சேமிக்கும் வாய்ப்புகள் அமையும். குழந்தை பாக்கியம் சிலருக்கு அமையும். மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 16-12-2023 வெள்ளி மாலை 04.25 முதல் 17-12-2023 ஞாயிறு இரவு 07.16 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, மஞ்சள், கருநீலம்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு சிவப்புப் பூ வைத்து, நெய் அன்னம் வைத்து, நெய் தீபமேற்றி வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் நன்மை கிடைக்கும்.
கடகம்
உறுதியுடன் எந்தக் காரியத்தையும் செய்து பலன் பெறும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை இல்லை. என்றாலும் தற்சமயம் சனி பார்வை பெறுவதால் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைக்காவிட்டாலும், உங்களின் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி வேலை அமையும்.
அரசியலில் சிலருக்குப் பின்னடைவு உண்டாகும். பாதிப்புகளிலிருந்து படிப்படியாக வெளிவருவீர்கள்.
மனித நேயமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சில சச்சரவு வந்து மறையும். கலைத்துறையினருக்கு சற்று பண வரவு தாமதமாகும்.
யாரிடமும் பேசும்போது அளவாக அளந்து பேசுவது நல்லது. தங்க நகை அடகு போகாமல் இருக்க உப்பு பானையில் வைத்து பிறகு அலுமாரியில் வைக்க அடகுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
சந்திராஷ்டம நாட்கள்: 17-12-2023 ஞாயிறு இரவு 07.17 முதல் 19-12-2023 செவ்வாய் இரவு 9.36 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, சிவப்பு, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: ஞாயிறு மாலை 04.30 - 06.30 மணிக்குள் நவக்கிரக வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் நன்மை உண்டாகும்.
சிம்மம்
திறமையும் தெளிவான முடிவு எடுக்கும் திறனும் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையும் ராசிநாதன் சூரியன் சுக ஸ்தானத்திலும், யோகாதிபதியுடன் இணைவு பெற்று தொழில் ஸ்தானத்தை பார்வைடுவது இதுவரை தடைப்பட்டு வந்த பல காரியங்களில் வெற்றியைத் தர உதவும்.
மதில் மேல் பூனை போல் எதைச் செய்யலாம் என்று யோசித்து வந்த உங்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் காரியத்தில் செயற்பட உதவியாக அமையும்.
சரியான நேரத்தில் எதையும் செய்து முடிப்பீர்கள். அரசியலிலும், சொந்தத் தொழிலும் தொய்வான சூழ்நிலை மறைந்து நன்மை பெறுவீர்கள். அரசாங்க காரியங்கள் சில உங்களுக்கு சாதகமாக அமையும். பொறுப்புத் தன்மையை பெறுவார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.
சந்திராஷ்டம நாட்கள்: 19-12-2023 செவ்வாய் இரவு 09.37 முதல் 21-12-2023 வியாழன் இரவு 12.24 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, ஒரெஞ்ச், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து நெய் தீபம் ஏற்றி உளுந்து வடையை நெய்வேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சகல காரியங்களும் வெற்றியைத் தரும்.
கன்னி
சமயோசிதமான காரியங்களில் திறம்பட செயற்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பது தொழிலில் நன்மையையும், வெற்றியையும் பெற்றுத் தரும்.
குடும்பத்தில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலை மறையும். உறுதியுடன் உங்களின் செயற்பாடுகள் நடைமுறைக்கு வரும். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செல்வாக்கு வளம் பெறும்.
புதிய திட்டங்களை அமுல்படுத்தி நன்மை பெற, இம்மாத இறுதியில் செயற்பாடுகள் சிறப்பாக அமையும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்பு அமையும். நல்ல காரியங்களைத் தள்ளிப் போடாமல் உடனே செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல சூழ்நிலை அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: 21-12-2023 வியாழன் இரவு 12.25 முதல் 24-12-2023 ஞாயிறு அதிகாலை 04.30 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: பச்சை, ஒரெஞ்ச், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியரை வணங்கி இலுப்பெண்ணெய் தீபமிட்டு துவரை அன்னம் வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாகும்.
துலாம்
நிதானமான போக்குடன் செயற்படும் துலா ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலும் குரு பார்வையும் பெறுவது சிறப்பு. சிலருக்கு திருமண வரன் அமையப் பெறுவீர்கள்.
உங்களின் லாபாதிபதி சூரியன் தனாதிபதியுடன் இணைவு பெறுவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். பொது வாழ்விலும், அரசியலிலும் ஏற்றம் பெறுவீர்கள். காலத்துக்குத் தகுந்தபடி உங்களை மாற்றிக்கொண்டு செயற்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையும். எதிர்ப்புகள் குறையும். எதையும் செயற்படுத்துவதற்கு முன் யோசித்து செயற்படுவீர்கள். பெண்கள் தொழிலிலும், வேலை வாய்ப்பிலும் வளம் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: 24-12-2023 ஞாயிறு அதிகாலை 04.31 முதல் 26-12-2023 செவ்வாய் காலை 10.41 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெண்மை, மஞ்சள், ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, செவ்வாய், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: வியாழக்கிழமை விநாயகர் வழிபாடு செய்து எள் கலந்த மிட்டாய் வைத்து தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ள சகல நன்மைகளும் உண்டாகும்.
விருச்சிகம்
விரும்பி எதையும் செய்து பலன் பெறும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்து தொழில் ஸ்தானாதிபதியுடன் இணைவு பெறுவதும் லாபாதிபதி தன ஸ்தானத்தில் அமர்வதும் உங்களுக்கு பணப்புழக்கத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வீர்கள். தனிப்பட்ட சில காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள். பாதுகாப்புத் துறையினருக்கு இடமாற்றம் வரும் வாய்ப்பு அமையும்.
விவசாயத்தில் எதிர்பார்த்த பலன் இருக்காது. விளையாட்டுத்துறையில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் தொழில் சார்ந்த சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிவரும். தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 26-12-2023 செவ்வாய் காலை 10.42 முதல் 28-12-2023 வியாழன் இரவு 07.10 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: ஒரெஞ்ச், சிவப்பு, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடமேற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடும், செவ்வாய்க்கிழமை சுப்ரமணியர் வழிபாடும் செய்து வேண்டிக்கொள்ள சிறப்பான நற்பலன்கள் அமையும்.
தனுசு
புதிய திட்டங்களை செயற்படுத்த முயற்சிக்கும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வையுடன் லாபாதிபதி ராசிநாதன் பார்வையிடுவதும் தனாதிபதி சனி சுக ஸ்தானத்தை பார்வையிடுவதும் தொழில், வேலை சார்ந்த வெளிநாட்டுத் தொடர்புகள் சிறப்பான நற்பலன்களைப் பெற்றுத் தரும்.
உங்கள் மேலதிகாரியின் மூலம் சில சலுகைகளையும் வசதிகளையும் பெறுவீர்கள். அரசியலிலும் உங்களின் செல்வாக்கு சிறப்பாக அமையும். மருத்துவத்துறையினருக்கு சிறப்பான பலன் கிட்டும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் அமையும். பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல வேலையும் வருமானமும் பெருகும். மாணவர்கள் பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். சகோதரர்கள் மூலம் புதிய செலவுகள் வரும். பொருளாதார நிலை மேன்மை அடையும். புத்திரர்களுக்கு திருமண காரியம் நிறைவேறும்.
சந்திராஷ்டம நாட்கள்: 28-12-2023 வியாழன் இரவு 07.20 முதல் 31.12.2023 ஞாயிறு அதிகாலை 06.07 மணி வரையும்.
01-12-2023 வெள்ளி பகல் 11.52 முதல் 03-12-2023 ஞாயிறு இரவு 10.48 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய்க்கிழமை சுப்ரமணியருக்கு நெய் தீபமிட்டு சிவப்பு நிறப் பூ வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் வெற்றியை தரும்.
மகரம்
பொது விடயங்களில் ஆர்வமுடன் செயற்படும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலே அமர்ந்தும் உங்களின் லாப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற்றுத் தரும்.
தொழில் சார்ந்த நல்ல தகவல்களும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் ஆட்சி பெறுவதும் நல்ல வளம் பெறச் செய்யும்.
லாப ஸ்தானத்தில் அட்டமாதிபதி சூரியனுடன் லாபாதிபதி இணைவு பெறுவதும் உங்களின் தேவைகளுக்கு ஏற்ற தன வரவை பெற்றுத் தரும்.
பொது விடயங்களில் தனித்திறமையுடன் செயற்படுவீர்கள். இதுவரை தொழில் அமையாதவர்களுக்கு நல்ல தொழில் அமையும். சகோதரர் மூலம் உங்களின் தேவைகள் நிறைவேறும். விளையாட்டுத்துறையில் சிறப்பாக இருப்பீர்கள். அரசியலில் முக்கிய பொறுப்பினை ஏற்க வேண்டிவரும்.
சந்திராஷ்டம நாட்கள்: 03-12-2023 ஞாயிறு இரவு 10.49 முதல் 06-12-2023 புதன் காலை 10.30 மணி வரையும்.
31-12-2023 ஞாயிறு அதிகாலை 08.08 முதல் 02-01-2024 செவ்வாய் மாலை 05.31 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், சிவப்பு, ஒரெஞ்ச்.
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை ஆஞ்சநேயரையும், செவ்வாய்க்கிழமை சுப்ரமணியரையும் தொடர்ந்து வழிபட்டு வர, தடைப்பட்ட காரியம் விரைவில் நிறைவேறும்.
கும்பம்
திட்டமிட்ட காரியங்களை குறித்த நேரத்தில் செய்யும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுமிடம் சிறப்பாக அமையும். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது இன்னும் சிறப்பான பலன்களைப் பெற்றுத் தரும்.
வலிமையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொள்வீர்கள். சரியான நேரத்தில் சில காரியங்களைச் செய்ய முடியாமல் போகும்.
அரசியலில் சற்று முன்னேற்றம் இருக்கும். உங்களின் செல்வாக்கு சரியாமல் பார்த்துக்கொள்வீர்கள். சமூக சேவை செய்வதில் ஆர்வம் உண்டாகும். கருத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்து செயற்படுவீர்கள்.
கலைத்துறையில் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். உங்கள் சொந்த முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். பிறருக்கு உதவி செய்வதை பெருமையாகவும், கடமையாகவும் எண்ணி செய்து வருவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: 06-12-2023 புதன் காலை 10.31 முதல் 08-12-2023 வெள்ளி இரவு 09.21 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: சனிக்கிழமை வைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வெண்மை நிறப் பூ வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களிலும் நன்மை உண்டாகும்.
மீனம்
சாதிக்க நினைத்ததை அடைந்தே தீரும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு உங்களின் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானங்களைப் பார்வையிடுவதால் நினைத்த காரியத்தை அடைய தடையின்றி நன்மை உண்டாகும்.
உங்களின் தொழில் மேன்மை அடைய உறுதுணையாக அமையும். கலைத்துறையில் இசைக் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
திருவிழாக்களில் அதிக ஈடுபாடு கொண்டு நன்மை அடைவீர்கள். அரசியலில் சில தடைகள் உண்டாகும். உங்களின் திறமைக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.
ஆன்மீகச் சேவைகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். பொது விடயங்களில் அதிக ஈடுபாடுகளைத் தவிர்த்துவிடுவீர்கள். புதிய திட்டத்தை தள்ளிப்போட்டுவிடுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: 08-12-2023 வெள்ளி இரவு 09.22 முதல் 11-12-2023 திங்கள் அதிகாலை 06.08 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம், பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்: வடக்கு, வடகிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன், சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நாக தேவதையை வணங்கி நெய் தீபமிட்டு சிவப்பு நிற அரளிப்பூ வைத்து வேண்டிக்கொள்ள சகல காரியங்களும் அனுகூலமாகும்.
(கணித்தவர் : ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM