மருதாணி போட்டுகொள்ளப் போகிறீர்களா?

04 Dec, 2023 | 04:42 PM
image

பெண்களுக்குப் பிடித்தமான அலங்காரப் பொருட்களில் மருதாணியும் ஒன்று. எல்லாப் பெண்களுக்கும் மருதாணி போட்டுக்கொள்வது இஷ்டம் தான். ஆனால், இப்போது விற்பனையாகும் மருதாணிப் பொடி வகைகள் சிலவற்றில், இரசாயனப் பதார்த்தங்கள் சேர்க்கப்படுவதால், அது ஒவ்வாமையை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.

குறிப்பாக, மருதாணி ‘கோன்’களில் வரும் மருதாணிப் பசை வகைகளில், அதீத சிவப்பு நிறத்தை ஏற்படுத்துவதற்காக, ‘பெராஃபெனிலீன்டயமின்’ என்ற இரசாயனத்தைச் சேர்த்துவிடுகின்றன சில தயாரிப்பு நிறுவனங்கள். இதனால்தான் சிலருக்கு இவ்வகையான மருதாணிகள் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடுகின்றன.

அந்நாட்களில், மருதாணி இலைகளைப் பறித்து, அரைத்து அவற்றைக் கொண்டே அலங்காரம் செய்யப்பட்டது. 

இன்னும் சிலர், இதில் தேசிக்காய், தேயிலை என்று இன்னும் சில சேர்மானங்களைச் சேர்த்து, இன்னும் கடும் சிவப்பாக மருதாணி வைத்துக்கொண்டனர்.

ஆனால் பின்னாட்களில், அதைப் பறிக்கவும் அரைக்கவும் நேரம் இல்லாமல் (!) போனது பெண்களுக்கு! இதைப் பயன்படுத்திக்கொண்ட சில அழகுசாதனப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், ‘ரெடிமேட்’ மருதாணிப் பசைகளை அறிமுகம் செய்தன.

இதன்போது, மருதாணிப் பசை கெடாமல் இருக்கவும் அதீத சிவப்பை வழங்கவும் சில இரசாயனச் சேர்மானங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தன இந்த உற்பத்தி நிறுவனங்கள்.

இந்த இரசாயனப் பொருட்கள் எல்லோருக்கும் ஒத்துப் போகா. இதனால்தான், இதுபோன்ற அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன், காதுப் பின் பகுதியில் கொஞ்சத்தைப் பூசி, ஒரு நாள் கழித்துப் பார்த்து, ஒவ்வாமை உறுதி செய்யப்படாவிட்டால் பயன்படுத்தவும் என்ற வாசகம் அவ்வுற்பத்திப் பொருட்களில் சேர்க்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் யார் படித்துப் பார்க்கிறார்கள்?

இவ்வாறு சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்களும் கூட, மிகக் குறைவான அளவிலேயே சேர்க்கப்பட வேண்டும் என்று நியதி இருக்கிறது. ஆனால், சில தரமற்ற நிறுவனங்கள் இதுபோன்ற பொருட்களைத் தயாரிக்கும்போது, இந்த நியதிகளைக் கண்டுகொள்வதில்லை.

இதுபோன்ற தரமற்ற பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால், நிரந்தர சரும நோய்களுக்கும் ஆளாகும் அபாயம் இருக்கிறது.

எனவே, மேலே கூறியபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பின்பற்றி, மருதாணியைப் பூசிக்கொள்வது அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.

விக்னேஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-02-22 17:04:44
news-image

டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பிற்குரிய...

2024-02-20 16:54:31
news-image

தீவிர ஒவ்வாமை பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

2024-02-19 18:58:31
news-image

மென்திசு சர்கோமா புற்றுநோய் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-17 17:36:29
news-image

பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனும் கல்லீரல்...

2024-02-17 16:39:47
news-image

செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு...

2024-02-16 20:22:59
news-image

தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

2024-02-14 16:15:29
news-image

லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய...

2024-02-13 16:55:56
news-image

புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை...

2024-02-12 16:40:05
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டிகளுக்கு நிவாரணமளிக்கும் சிகிச்சை

2024-02-09 16:49:44
news-image

குருதியிலுள்ள வெள்ளையணுக்களின் செயல்பாட்டுத் திறன் குறைபாட்டுக்குரிய...

2024-02-08 16:27:55
news-image

நச்சு எபிடெர்மல் நெக்ரோலிசிஸ் எனும் தோல்...

2024-02-07 17:28:24