“இருளடைந்த வாழ்வுக்கு ஒளி” தேசிய பக்கவாத தின நடைப்பயணம் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்றது. 

Image result for பக்கவாதம்

பக்கவாத நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டி பக்கவாத நோயை தவிர்க்கும் நோக்குடன் இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தினால் இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பக்கவாத நோய் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டுவதற்கு இலங்கை தேசிய பக்கவாத சங்கம் மேற்கொள்ளும் சேவையை பாராட்டிய ஜனாதிபதி, அச் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தார். 

ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி சுகாதார துறைக்காக ஆற்றும் சேவையை பாராட்டிய இலங்கை தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவர் எம்.டி.எம்.ரிப்ஷி, அதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். 

மூளைக்கான குருதி வழங்கலில் சடுதியாக எற்படும் தடை காரணமாக  பக்கவாதம் ஏற்படுகிறது. உலகில் உயிரிழப்பு ஏற்படுத்தும் நோய்களில் பக்கவாதம் இரண்டாவது இடத்திலுள்ளது. அத்துடன் முதியோர்களை அங்கவீனராக்கும் பிரதான காரணியாகவும் உள்ளது.