மகளிருக்கான 'மேஜர் கிளப்' 50 ஓவர் கிரிக்கெட் ; இறுதிப்போட்டியில் விமானப்படை அணியுடன் மோதும் இராணுவப் படை அணி

Published By: Digital Desk 3

04 Dec, 2023 | 03:07 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நடாத்தும் மகளிருக்கான அழைப்பு 'மேஜர் கிளப்'  50 ஓவர்  கொண்ட கிரிக்கெட் தொடரின் (Women's Invitational Major Club 50 Over Tournament ) இறுதிப் போட்டியில் இலங்கை விமானப்படை மகளிர் அணியும், இலங்கை இராணுவப் படை மகளிர் அணியும் நாளை (05) எதிர்த்தாடவுள்ளன. 

கொழும்பு  பீ.ஆர்.சீ (BRC) மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, நாளை  செவ்வாய்கிழமை 9.30 மணிக்கு ஆரம்பமாகும். 

முதலாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை கடற்படை மகளிர் கிரிக்கெட் அணியை  இலங்கை இராணுவப்படை மகளிர் அணி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேிறியிருந்ததுடன், சிலொவ் மேரியன்ஸ் கழக மகளிர் அணியை  வென்று இலங்கை விமானப்படை அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டது.

நாளை நடைபெறும் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்