மலிங்கவின் புதிய அவதாரம்

04 Dec, 2023 | 02:54 PM
image

லசித்மலிங்க வெற்றிகரமான பந்துவீச்சாளராக திகழ்ந்த காலப்பகுதியில் ஒன்றரை தசாப்தத்திற்கு மேல் அவரது கால்விரல்களை நசுக்கும் யோர்க்கர்கள் காரணமாக இலங்கை அணி எதற்கும் கவலைப்படதேவையில்லை என்ற நிலை காணப்பட்டது.

ஓய்வு பெற்று மூன்று வருடங்;களின் பின்னர் மலிங்க தனது பயணத்தை வேறு திசையில் மாற்றியுள்ளார்,வேறு ஆடுகளத்தில்.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சில பாடல்களை இயற்றியுள்ளதுடன் அவற்றின் மூலம் வெற்றிபெற எண்ணியுள்ளார்.

யோர்க்கர் பந்துகளை திறமையாக வீசப்பழகுவது என்பது எனது ஆர்வத்தை பின்பற்றுவதில் ஒரு சிறந்த பயணமாகும் என தெரிவித்துள்ள அவர் நான் தற்போது எனது புதிய ஆர்வத்தில் கவனம் செலுத்துகின்றேன் தீவிரமாக உள்ளேன் புதிய பாடலாசிரியர் லசித்மலிங்க குறித்து என்ன நினைக்கின்றீர்கள்  என அவர் தெரிவித்துள்ளார்.

14 பாடல்கள் அடங்கிய லைவ் என்ற அல்பத்தை லசித்மலிங்க உருவாக்கியுள்ளார்.

இது தவிர இரண்டுபாடல்களையும் அவர் எழுதியுள்ளார்.

அவரது பாடல்களில் ஒன்று இந்திமொழியிலும் வெளியாகவுள்ளது.இந்திமொழியில் எனது பாடலை வெளியிடும் முயற்சிகளில் நான் ஈடுபட்டுள்ளேன் இலங்கையின் மிகவும் திறமையான பாடகர் ஒருவர் அதற்கு குரல்கொடுக்க இணங்கியுள்ளார் அந்த பாடல் வெளியானதும் இலங்கை இந்திய ரசிகர்கள் அதற்கு பெரும்வரவேற்பை வழங்குவார்கள் என மலிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நான் எனது அனுபவங்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய உத்திகள் குறித்து நூல் ஒன்றை எழுதிவருகின்றேன் நான் அந்த நூலை எழுதிக்கொண்டிருக்கும்வேளை பாடலை எழுதும் எண்ணம் உதித்தது என மலிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right