மட்டக்களப்பு வார் வீதியில் உள்ள லூத்து மாதா தேவாலயத்தின் காணிக்கை உண்டியலை உடைத்து திருடமுற்பட்ட சந்தேகநபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது போன்ற திருட்டு சம்பவங்கள் ஏற்கனவே இரு தடவைகள் இடம்பெற்றுள்ளதாக அருட்த்தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.