(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மின் கட்டண அதிகரிப்பு காரணமாக இதுவரை 5 இலட்சம் பேரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன் 50 இலட்சம் பேருக்கு மின் இணைப்பை துண்டிப்பதற்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை மின்சார சபை அதிக இலாபம் ஈட்டிக்கொண்டே மின் கட்டணம் அதிகரித்திருக்கிறது. அதனால் நீர் மின் உற்பத்தி மூலம் இலங்கை மின்சார சபை பெற்றுவரும் லாபத்தை சபைக்கு அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (4) சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இலங்கை மின்சார சபை லாமிமீட்டி வருவதால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்த போது அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாேம்.
ஆனால் தற்போது அதிக மின் கட்டணம் காரணமாக இதுவரை 5 இலட்சம் பாவனையாளர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 50 இலட்சம் பெருக்கு மின்சார துண்டிப்புக்கான சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. முருத்தொட்டுவே ஆனந்த தேரரின் அபயராம விகாரையின் மின்சார்தை அநீதியான முறையில் துண்டிப்பதற்கு முற்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபை நீர் மின்சார உற்பத்தி மூலம் கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டிவரும் நிலையில் மிகவும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வரும் 50 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு இவ்வாறு சிவப்பு அறிவித்தல் விடுத்திருப்பது நியாயமா என கேட்கிறோம்.
மக்கள் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி நிலையை ஏன் அரசாங்கம் உணராமல் இருக்கிறது என கேட்கிறோம். மின்சாரசபை பாரியளவில் இலாம் ஈட்வரும்போது மின் கட்டணத்தை ஏன் அதிகரிக்க வேண்டும் என நாங்கள் அன்று மின்சாரத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தோம். ஆனால் அதற்கு இதுவரை பதில் வழங்கவில்லை.
மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என தெரிவித்து 50 இலட்சம் மக்களின் மின்சாரத்தை துண்டிக்க அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கும் போது, இது தொடர்பில் நாங்கள் பேசாமல் வாய்மூடி இருக்க முடியுமா? அதனால் நீர் மின்சார உற்பத்தி மூலம் இலங்கை மின்சார சபை எந்தளவு இலாபம் ஈட்டி வருகிறது என்பதையும் அந்த லாபத்தினால் மின் கட்டணத்தை குறைக்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் இந்த சபைக்கு தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பில் அரசாங்கம் இந்த சபைக்கு தெளிவானதொரு பதிலை வழங்கவேண்டும் என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜந்த தெரிவிக்கையில், இந்த விடயங்களை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு தெரிவித்து இன்னும் சில தினங்களில் தெளிவானதொரு பதிலை சபைக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM