சசி - சரத் ; புதுமைக் கூட்டணி!

Published By: Vishnu

04 Dec, 2023 | 01:17 PM
image

நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமாரின் புத்தம் புதிய திரைப்படம், ‘நா நா’. இதில், சசிகுமாருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்.

என்.வி.நிர்மல் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படமும் இம்மாதம் 15ஆம் திகதியன்று வெளியாகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதே நாளில், லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பான ‘ஃபைட் க்ளப்’ படமும் வெளியாகவுள்ளது.

அயோத்தி படத்தின் பின் வெளியாகும் சசிகுமார் படம் என்பதால், படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. என்றபோதும் அயோத்திக்கு நேரெதிரான, சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக நா நா இருக்கும் என்பது, படத்தின் முன்னோட்டத்தில் இருந்தே தெரிகிறது.

டெல்லி கணேஷ், பாரதிராஜா போன்ற ஜாம்பவான்கள் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைத்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right