கமலுடன் இணையும் வாரிசு!

Published By: Vishnu

04 Dec, 2023 | 01:08 PM
image

நாயகன் திரைப்படத்தின் பின், சரியாகச் சொல்வதானால், 36 வருடங்களுக்குப் பின், கமல் - மணிரத்னம் இணைந்திருக்கும் படம் ‘தக் லைஃப்’. இதனாலேயே இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது.

மேலும் கமல் - மணி கூட்டணி தவிர, இன்னும் பல பிரபலங்கள் இந்தப் படத்தில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என்று முக்கிய நட்சத்திரங்கள் பலர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

கடந்த வாரம், தமிழ் நடிகையான அபிராமியும் இந்தப் படத்தில் இணைந்ததாக உறுதியான தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில்தான், இப்போது, நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்கும் இந்தப் படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டுமன்றி, இன்னும் பல நடிக, நடிகையர் இணையவிருப்பதாகவும் படப்பிடிப்புகள் ஆரம்பிப்பதற்கு முன் அது பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் படக் குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right