ஈழத்து புரட்சி பாடகர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்..!

26 Feb, 2017 | 03:00 PM
image

ஈழத்தின் தலைசிறந்த பாடகரான எஸ்.ஜி.சாந்தன்  சுகயீனம் காரணமாக ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இன்று மாத்திரம் பாடகர் சாந்தனுக்கு அடுத்தடுத்து இரண்டு தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

'அப்பாவின் அனைத்து அசைவுகளும் முடங்கியுள்ளதாகவும் நாடித்துடிப்பு மாத்திரம் இயங்குவதாகவும் வைத்தியர்கள் அப்பாவை காப்பாற்ற முழு முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் பாடகர் சாந்தனின் மகன் கோகுலன் தெரிவித்துள்ளார்.

 மேலும் இன்று அதிகாலை வைத்தியரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தவறான கருத்தின் காரணமாகவே அப்பா இறந்து விட்டார் என கூறியிருந்தேன். இதற்காக அனைவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் ' எனவும் பாடகர் சாந்தனின் மகன் கோகுலன் தெரிவித்துள்ளார்.

இந்த மண் எங்களின் சொந்த மண் எனும் பாடலின் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த சாந்தன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்தின் புகழ்கூறும் "பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலையிலே உருவானார்" மற்றும் அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் தோரணம் இசைப்பேழையில் உள்ள மூன்று பாடல்கள் என பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்தர பாடத்தொகுதியில் சட்டம், சமூக நல்லிணக்கம் ...

2026-09-15 06:02:52
news-image

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட...

2026-09-15 06:00:26
news-image

தித்வா அனர்த்த நட்டஈட்டு வேலைத்திட்டம் வெற்றிகரமாக...

2026-09-15 05:57:44
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச...

2026-09-15 05:47:55
news-image

அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது...

2026-09-15 04:55:46
news-image

முல்லைத்தீவில் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட 17,469.58 ஹெக்டேயர்...

2026-09-15 00:03:48
news-image

வலி.வடக்கில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கழிவுகள்: மீள...

2026-09-15 00:00:04
news-image

மாகாணசபைத் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சி...

2026-09-14 12:54:25
news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு:...

2026-09-14 16:55:48
news-image

இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு...

2026-09-14 13:54:26
news-image

சிறைச்சாலை நாமலுக்கு புதிதல்ல; எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய...

2026-09-14 16:57:09
news-image

தெஹிவளையில் சிறுவர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா கடும்...

2026-09-14 13:56:05