பாதிக்கப்பட்டிருந்த வடபகுதி ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளது. 

கொலொன்னாவையில் இருந்து அனுராதபுரம் வரை எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று செனரத்கம மற்றும் தம்புத்தேகம பகுதியில் வைத்து தடம்புரண்டமையால் வடபகுதி ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இன்று அதிகாலை 4.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதோடு தற்போது நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.