பணியிட பாலியல் துன்புறுத்தலை குறைத்தல் : 3 தடைகளும் அடையாளம் காணப்பட்ட தீர்வுகளும்

Published By: Vishnu

03 Dec, 2023 | 02:33 PM
image

இலங்கையில் பணியிட பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் நீதியை நாடும்போது மூன்று முக்கிய தடைகளை எதிர்கொள்கின்றனர் என்று வெரிட்டே ரிசர்ச்சின் சட்டம் மற்றும் ஆளுகைப் பிரிவின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அத்தோடு, இந்நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை (01) ‘பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் : நீதிக்கான தடைகளை தாண்டுவோம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கையளித்தது. 

வெரிடே ரிசர்ச், அறிக்கையின் கண்டுபிடிப்புகள் குறித்து அமைச்சருடன் விவாதித்து, சட்டக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை வலியுறுத்தி மற்றும் பணியிட பாலியல் துன்புறுத்தல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரை செய்தது.

சட்டச் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வேலையிட பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும், தற்போதைய வரைவு வேலைவாய்ப்பு சட்டமூலத்தில் அவற்றை இணைக்க வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வாளர் குழு பரிந்துரை செய்தது.

பிலிப்பைன்ஸ், பெரு, ஜப்பான், மெக்சிகோ மற்றும் ஈராக் போன்ற நாடுகள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்களைக் குறைக்க எடுத்த பல்வேறு அணுகுமுறைகளை கவனத்தில் கொண்டு இவ்வறிக்கை நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஆய்வானது கடக்கவேண்டிய 3 தடைகளை அடையாளம் காண்கிறது. அவையாவன:

⦁ பல்வேறு சட்டங்களில் மாறுபட்ட சட்ட விதிகள் இருந்தபோதிலும், பாலியல் துன்புறுத்தல் குறித்து போதுமான சட்ட வரையறை இல்லாமை.

⦁ சட்ட தாமதங்கள் போன்ற நிறுவன தடைகள் மற்றும் குற்றவியல் நீதி அமைப்புக்குள் உள்ள நியாயமான, ஐயத்துக்கிடமின்றிய கடுமையான நிரூபிக்கும் பொறுப்பு.

⦁ வேரூன்றிய கலாசார தடைகள் மற்றும் விழிப்புணர்வின்மை. இது பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையை மேலும் அதிகரிக்கிறது.

இந்த அறிக்கையினூடாக பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகள் பின்வருமாறு : 

⦁ பணியிட 'வன்முறை மற்றும் துன்புறுத்தல்' என்பதற்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வரையறையை ஏற்றுக்கொள்வது - இது காமாந்திரத்தை (voyeurism) குற்றமாக உள்ளடக்கியது. மேலும் பாலியல் உள்ளடக்கத்தைக் கொண்ட டிஜிட்டல், மின்னியல் ஊடகங்களை உள்ளடக்கிய பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விரிவான பாதுகாப்பை வழங்குவது.

⦁ பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தொழில் வழங்குநரின் பொறுப்பு தொடர்பான சிவில் சட்ட மாற்றங்களை, தற்போதைய குற்றவியல் குற்றச்செயல்களுடன் ஒரு துணை பொறிமுறையாக ஏற்றுக்கொள்வது.

பணியிட பாலியல் துன்புறுத்தலை தணிப்பதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் குறைந்தபட்ச நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு தொழில் வழங்குநர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதில் உள்ளக புகாரளிக்கும் முறை மற்றும் விசாரணை வழிமுறைகள் அடங்கும். அத்துடன், பிணக்குகளுக்கான மாற்றுத் தீர்வு அணுகலை எளிதாக்கும் முறைகள் ஆகியன அடங்கும்.

⦁ சட்ட அமுலாக்க முகவர்கள் (காவல்துறை, படைத்துறை), பாரிய பணியிடங்கள், பாடசாலை பாடத்திட்டங்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பல்வேறு துறைகளில் கல்வி, பயிற்சி மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான விரிவான பரிந்துரைகளை இந்த அறிக்கை வழங்குகிறது.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சினைகள் பற்றிய புரிதல், திறன் மற்றும் உணர்வு ஆகியவற்றை மேம்படுத்த ஒவ்வொரு வகைக்கும் குறிப்பிட்ட அணுகுமுறைகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.

பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல!

வெரிட்டே ரிசர்ச்சின் சட்டம் மற்றும் ஆளுகைப் பிரிவின் அறிக்கை, இலங்கையில் வழக்கமான பாலின எல்லைகளுக்கு அப்பால் பணியிடத்தில் நிகழ்கின்ற பாலியல் துன்புறுத்தல்கள் விரிவடைகின்றன என்பதை காட்டுகிறது. பெண்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றாலும் கூட, ஆண்களும் வெவ்வேறு பாலின அடையாளங்களைக் கொண்ட நபர்களும் இங்கு பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் LGBTQI (பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலினச் சேர்க்கையாளர்கள், திருநங்கை/திருநம்பி, விந்தையான மற்றும் இடைப்பால் நிலை) சமூக உறுப்பினர்கள் போன்ற சிறுபான்மை குழுக்கள் இத்தகைய சூழ்நிலைகளில் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகளை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26