அராலி - பொன்னாலைக்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 354 ஏக்கர் காணியை அரசு ஆக்கிரமிக்க திட்டம் - த.சித்தார்த்தன்

Published By: Vishnu

03 Dec, 2023 | 12:02 PM
image

சங்கானைப் பிரதேச செயலகத்திலே அராலி தொடக்கம் பொன்னாலை வரை ஏறக்குறை 10 கிலோமீற்றர். அங்கு என்ன நடக்கின்றது என்றால், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் 'வன ஜீவராசிகள்' என்பதை விட்டுவிட்டு 'வன வளங்கள் பாதுகாப்பு' என அந்த இடங்களுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றி, அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பார்க்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏறக்குறைய 354 ஏக்கர். 07 மயானங்கள், விளையாட்டுத் திடல்கள், தனியார் காணிகள் எல்லாமே அதற்குள் அடங்குகின்றது. இதுபற்றி அரச அதிபர் சங்கானை பிரதேச செயலாளரைக் கேட்டிருக்கின்றார். பொதுமக்களையும் பொது அமைப்புக்களையும் அழைத்து இது சம்பந்தமான அவர்களுடைய அபிப்பிராயங்களை எடுக்கும்படி, அங்கு சென்ற எல்லோருமே அதை செய்யக்கூடாது என்றே சொல்லியிருக்கின்றார்கள்.  

ஏனென்றால், பின்பு அப்பகுதி கடலில் மீன்பிடிக்கச் செல்பவர்கள் அங்கு செல்ல முடியாமல் போகும். அந்த மயானங்களை பாவிக்க முடியாமல் போகும். காரணம், வன வளங்கள் பாதுகாப்பு என்று அவர்கள் மீனவர்களை விட மாட்டார்கள்.

இது மாத்திரமல்ல, ஜனாதிபதி அவர்கள் சொல்லியிருக்கிறார், அமைச்சர் அவர்கள் சொன்னார்கள், 85ஆம் ஆண்டுக்கு முந்தைய நிலைமைக்குத் தான் கொண்டுசெல்லப் போகின்றோம் என்று. ஆனாலும் அங்கு இந்த விடயம் நடந்துகொண்டிருக்கிறது. அவற்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு வலயமாக எடுப்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

நிச்சயமாக இவை எல்லாம் நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால், தமிழ் மக்களை பொறுத்தமட்டில் நம்பிக்கையை உருவாக்க வேண்டியது உங்களுடைய கடமை. எனவே, அதை கட்டாயமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 08:03:06
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58
news-image

சர்வதேச தொழிலாளர் தின மேதின கூட்டம்...

2026-04-20 05:43:24
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்திரியாரச்சி...

2026-04-20 05:39:18
news-image

இந்திய வம்சாவழி மக்களின் மேம்பட்டை உறுதிப்படுத்துவது...

2026-04-20 05:32:40
news-image

12கோரிக்கைகளை முன்வைத்து இந்திய துணை ஜனாதிபதியிடம்...

2026-04-20 05:23:36
news-image

தமிழ் தலைவர்களிடையே ஒற்றுமை மிக அவசியம் ...

2026-04-20 05:24:05
news-image

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்ட...

2026-04-20 05:24:27
news-image

இலங்கை இந்திய ஒப்பந்தம் தொடர்பில் டில்லியின்...

2026-04-20 05:24:55
news-image

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை சாத்தியமாக்க...

2026-04-20 04:42:11
news-image

திருகோணமலை ஹோட்டல் தீ விபத்து: கட்டிடம்...

2026-04-20 04:23:22