சத்தீஸ்கரில் முந்தும் காங்கிரஸ், பாஜகவுக்கு பின்னடைவு

03 Dec, 2023 | 10:11 AM
image

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்க, பாஜக கட்சி 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி 124 தொகுதிகளில் முன்னிலை வகித்துள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி 94 தொகுதிகளில் முன்னிலை வகித்து இந்தத் தேர்தலில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

மத்தியப் பிரதேசம் இலக்கு 116

கட்சிகள் முன்னிலை

பாஜக 150

காங்கிரஸ் 78

இதர கட்சிகள் 2

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதற்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை 22.36 லட்சம் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் உட்பட மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்த மாநிலத்தில் பாஜக - காங்கிஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. அங்கு கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியது. அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், ஓபிசி பிரிவினரின் நலன் காக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக 4-வது முறையாக ஆட்சியை தொடர்ந்தது. இதனால் மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலையும் உள்கட்சி பூசலும் அதிகரித்து இருந்தது. இதேபோன்ற சூழல் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலின்போதும் நிலவியது. இதன் காரணமாக 4-வது முறையாக முதல்வர் வேட்பாளராக்கப்பட்ட சிவராஜ் சிங்குக்கு தோல்வி கிட்டியது. கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. எனினும், அந்த ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா உதவினார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 110 இடங்களையும், காங்கிரஸ் 109 இடங்களையும் கைப்பற்றியது.

இந்த முறையும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிரத்தில் பாஜக இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்தது. அதேபோல் தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் 11 பேருக்கு அக்கட்சி வாய்ப்பளித்திருந்தது. இந்த நிலையில், சம பலத்துடன் தேர்தலைச் சந்திக்கும் நிலையில், இவ்விரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலையுண்ட பெண்...

2026-07-15 16:09:32
news-image

கியூபாவில் மீண்டும் நாடளாவிய ரீதியில் மின்...

2026-07-15 15:14:24
news-image

தாய்லாந்து விடுதியில் தீ விபத்து :...

2026-07-15 13:04:17
news-image

பெல்ஜியத்தில் பயங்கர சோகம் ; பிரஸ்ஸல்ஸ்...

2026-07-15 09:40:24
news-image

ஈரானில் எல்லாம் அழிந்துவிட்டது ; மொஜ்தபா...

2026-07-14 13:04:47
news-image

சவூதி அரேபியா மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்...

2026-07-14 12:58:29
news-image

ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 கப்பல்கள்...

2026-07-14 12:28:49
news-image

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர்தப்பிய நபர்!

2026-07-14 12:27:48
news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10