பலஸ்தீனுக்கு ஆதரவளிக்கும் வகையில் சபைக்கு பலஸ்தீன் சால்வை அணிந்துவந்த எம்.பிக்கள்

03 Dec, 2023 | 10:11 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முஸ்லிம் எம்.பிக்கள் நேற்று இலங்கை பலஸ்தீன் நட்புறவு சால்வை அணிந்து சபைக்கு வந்திருந்தனர். 

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இதன்பாேது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேசிய மக்கள் காங்கரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா ஆகியோர் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை பலஸ்தீன் நட்புறவு சால்வை அணிந்திருந்தனர். 

அத்துடன் விவாதத்தில் கலந்துகொண்டு ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், பலஸ்தீன் மக்களுக்கு எமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்த சால்வையை அணிந்திருக்கிறோம். அங்கு யுத்த நிறுத்தம் இடம்பெறும் வரைக்கும் எமது ஆதரவை வெளிப்படுத்தி வருவோம் என்றார்.

ரிஷாத் பதியுதீன் குறிப்பிடுகையில், இஸ்ரேல் அரசாங்கம் காஸா மீது  மேற்கொணடு வரும் மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அதேநேரம் இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பி, அரபு நாடுகளின் வெறுப்பை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளக்கூடாது. அரபு நாடுகள் எப்போதும் எமக்கு உதவி வருகின்றதை அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்றார்.

அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர் திலான் பெரேராவும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பலஸ்தீன் ஆதரவு சால்வை அணிந்திருந்தார். யுத்த நிறுத்தம் இடம்பெறும் வரை இந்த சால்வையை அணிந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் அவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் இந்த சால்வை அணிந்து வந்து, இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்பக்கூடாது என்ற பிரேரணை ஒன்றையும் முன்வைத்தார். 

மேலும், விவாதத்தில் கலந்துகொண்டிருந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்து வரும் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் சபையில் இருந்த அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் பலஸ்தீன் மக்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கவும் இல்லை. பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான சால்வை அணிந்திருக்கவும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47