மாத்தளை - லக்கல - களுகங்கை வேலைத் திட்டத்தில், அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கல் குவாரியில் மண்மேடு சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன், மற்றுமொருவர் மண் மேட்டினுள் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, ஊழியரைக் கப்பாற்றும் முயற்சிகளுக்கு சில குழுக்களின் உதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக, களு கங்கை வேலைத் திட்டத்தின் மேலதிக பணிப்பாளர் டீ.பி.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.