(நமது நிருபர்)
பொலிஸாரின் கைதுக்குப் பின்னர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸுக்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்று (03) முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கண்டனப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வட்டுக்கோட்டை பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளால் கொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸன் (அலெக்ஸ்) மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் பாரிய கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தக் கண்டனப் போராட்டமானது இன்று ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 3 மணிக்கு வட்டுக்கோட்டைச் சந்தியில் நடைபெறவுள்ளது.
இந்த நீதிப்போராட்டத்தில் அனைவரும் திரண்டு நமது எதிர்ப்பை பதிவு செய்வதோடு, நீதிக்கான குரலை ஓங்கி ஒலிப்போம். அத்துடன் 'இன்று அலெக்ஸ், நாளை இன்னொரு தமிழ் மகன்' என்ற நிலைமைகளை தடுத்து நிறுத்துவோம் என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM