பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக சாணக்கியன் தெரிவிப்பு - செவ்வாயன்று சபையில் விவாதம்

02 Dec, 2023 | 10:10 PM
image

(நமது நிருபர்)

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேணை கொண்டு வரப்படவுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். 

குறித்த பிரேரணையில், இலங்கை சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான பயங்கரவாதத் தடைச் சட்டம் 1979இல் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகத்தில் அவசரகாலச் சட்ட ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கையின் அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் இந்த கொடூரமான சட்டத்தைப் பயன்படுத்தி பெரும்பாலான தமிழர்களையும் முஸ்லிம்களையும் உண்மையான காரணமின்றி தடுத்து வைத்து, சித்திரவதையின் மூலம் பொய்யான வாக்குமூலங்களைப் பெறுவதற்குப் பயன்படுத்தினார்கள்.

2022 இல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிங்கள இளைஞர்களும் கைது செய்யப்பட்டு ஒடுக்குமுறை பிரயோகிக்கப்பட்டது.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில், பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்று நாடு தழுவிய கையெழுத்து வேட்டை பிரசாரமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நானும். முன்னெடுத்தோம். இந்தப் பிரசாரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடத்தலிருந்து முழுமையான ஆதரவும் கிடைக்கப் பெற்றிருந்தது.

அதேபோன்று குறித்த சட்டத்தின் பாதக நிலைமைகள் தொடர்பில் உள் நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் பல கட்டமைப்புக்கள் கண்டனங்களை வெளியிட்டிருந்தன, குறிப்பாக இந்த சட்டத்தினை இரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின. எனினும் இலங்கை அரசாங்கம் அந்தச் செயற்டபாட்டை முன்னெடுப்பதற்கு தவறிஞயுள்ளது.

குறிப்பாக, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடிய பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் இணைந்து, கடந்த ஆண்டு போராட்டக்காரர்களை தடுத்து வைக்க இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையானது பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்துவதை இரத்துச் செய்தென உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான உத்தரவாதங்களை அரசாங்கம் வழங்கி இருந்தபோதிலும், நவம்பர் கடைசி வாரத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் 9 தனிநபர்களை பொலிஸார் கைது செய்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு உள்நாட்டில் குடிமக்களை ஒடுக்கும் அதேவேளையில் நல்லிணக்கம் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது பற்றி பேசி சர்வதேச சமூகத்தையும் மனித உரிமைகள் பேரவையையும் தவறாக வழிநடத்த அரசாங்கம் முயல்கிறதா? ஏன்ற கேள்வி உள்ளதென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில்...

2025-02-08 15:16:46