(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாட்டில் தற்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளதா என்பது சந்தேசகத்திற்கிடமாக உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் நிதியமைச்சு உள்ளதால் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்வி குள்ளாக்கப்பட்டுள்ளது.
நிறை வேற்றுத்துறையால் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதால் மக்களாணை மலினப்படுத்தப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
நீதிமன்ற கட்டமைப்பையும்,சட்டங்களையும் மறுசீரமைப்பதற்கு நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.
சட்டத்துறை,நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய முத்துறைகளுக்கான அதிகாரம் அரசியலமைப்பினால் வேறுப்படுத்தப்பட்டுள்ளது.ஒருதுறையின் அதிகாரத்தில் பிறிதொரு தலையிட கூடாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் அதிகாரத்தையும்,கோட்பாடுகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உண்டு என முன்னாள் சபாநாயகர் அனுர பண்டார பலமுறை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.ஆனால் தற்போது அவ்வாறான தன்மை காணப்படுகிறா? என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஆற்றும் உரைக்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்,உயர் நீதிமன்ற நீதியரசர்கள்,பிரதம நீதியரசர்கள் மற்றும் நீதியரசர்கள் ஆகியோரை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆகவே சட்டவாக்கத்துறையும்,நீதித்துறையும் எந்நிலையிலும் இணக்கமாக செயற்பட வேண்டும்.
நாட்டில் தற்போது சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளதா என்பது சந்தேசகத்திற்கிடமாக உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் நிதியமைச்சு உள்ளதால் ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிறைவேற்றுத்துறையின் செயற்பாடுகளினால் பிற்போடப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது.
அரசியலமைப்பு பேரவையை புறக்கணித்து ஜனாதிபதி செயற்படுகிறார்.அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு விசேட தெரிவு குழு அமைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டமை முற்றிலும் தவறானது.
ஜனாதிபதியின் எண்ணங்களை செயற்படுத்த முடியாது.அவரும் வரையறைகளுக்குட்பட்டு செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM