சிம்புவுக்கு 10 இல் குரு கடவுள் காப்பாற்றிவிட்டார்

Published By: Robert

06 Jan, 2016 | 10:43 AM
image

சிம்புவுக்கு 10 இல் குரு ஆனாலும், எல்லாம் வல்ல இறைவன் என் மகனை காப்பாற்றிவிட்டார். என் யாகத்துக்கும் பிரார்த்தனைக்கும் பலன் கிடைத்து விட்டது என்று நடிகர் சிலம்பரசனின் தந்தையும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிய சிம்புவுக்கு எதிராக தமிழகமெங்கும் பல்வேறு தரப்பினர் பல பிரிவுகளில் வழக்குகளை தொடர்ந்தனர். இந்நிலையில் சிம்பு தனக்கு முன் பிணை வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அது தொடர்பிலான விசாரணை நேற்று நடைபெற்றபோது நீதிமன்றம் சிம்புவுக்கு முன் பிணையளித்தது.

இதனையடுத்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளதாவது,

என் மகனை கடவுள் காப்பாற்றிவிட்டார் நான் காஞ்சீபுரம் சென்று 3 கோயில்களில் சாமி கும்பிட்டேன். யாகம் வளர்த்தேன். பின்னர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவுக்கும் சென்றேன். அத்தனை பிரார்த்தனைகளுக்கும், கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி இது.

என் பேட்டியையும், என் மனைவியின் பேட்டியையும் பார்த்துவிட்டு, வழக்குகளை வாபஸ் பெற்ற மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் ஆகியோருக்கு நன்றி. இந்த வழக்குகள் வாபஸ் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்ட இலட்சிய தி.மு.க தொண்டர்கள், சிம்புவின் ரசிகர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாகவே பத்தில் குரு வந்தால் அதுவரையிலும் தனக்கிருந்த கம்பீரமும், கௌரவமும் குறையும். எந்தப் பதவியிலிருந்தாலும் கௌரவத்தை சிதைத்து வதந்திகளில் சிக்கிக் கொள்ள வைக்கும். இவர்களுக்குக் கீழே இருப்பவர்களுக்கு மேன்மையான உயர்பதவிகளைக் கொடுத்து தரத்தை குறைத்து வைப்பார்கள். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கியபடி இருக்கும்.

இப்படித்தான் என் மகனுக்கும் நேர்ந்துள்ளது . யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி சிம்புவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. ஆனால் , எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து தர்மம் வென்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right