கடன் பிரச்சினை தீர வேண்டுமா?

02 Dec, 2023 | 12:38 PM
image

'கடனாளியாக எழுவதை விட பட்டினியாக உறங்குவது மேல்' என்று கூறுவார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்துக்காக கடன் வாங்குகின்றனர். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். 

உழைக்கும் பணம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லாதபோதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் கடன் வாங்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். அது காலப்போக்கில் பெரிதாகி தீரவே தீராத பெரும் சுமையாகியும் விடுகிறது. 

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

செவ்வாய் பகவானின் திருவருள் இருந்தால் கடன் இல்லாத வாழ்க்கை அமையும். விரயச் செலவுகள் குறையும் என்பார்கள். எனவே செவ்வாய்தோறும் செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானை வணங்கி வர வாழ்கையில் யோகம் உண்டாகும்.

கடன் அடைக்க நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது. குறிப்பாக, கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையை பயன்படுத்துவது சிறப்பு ஆகும். 

இவ்வாறு செய்தால், கடன் பிரச்சினை விரைவில் தீரும். அதேபோல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். 

இதேபோல, வழக்கு உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் அதற்கு தீர்வு காண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும். 

அதேபோல செவ்வாய்க்கிழமை ஒரு பொருளை தானமாக கொடுத்தால் செல்வ வளம் பெருகும்; கடன் பிரச்சினை தீரும் என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், செவ்வாய்க்கிழமை குளிகை நேரத்தில் பகல் 12 முதல் 1.30க்குள் கடனில் சிறு பகுதியை கட்டினால், திரும்ப திரும்ப கடன் தொகையை முழுவதும் கட்டி மீண்டுவிடலாம். நிச்சயம் முழு கடனும் தீரும். அதுபோல குளிகை நேரத்தில் கடனே வாங்காதீர்கள். அடகு வைத்த நகைகள் வீடு வந்ததும் நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீரில் போட்டு பூஜை அறையில் ஒருநாள் வைத்த பிறகே உபயோகியுங்கள்.

அதேசமயம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும் என  கூறப்படுவதுடன், அமாவாசை மற்றும் அஷ்டமி திதிகள் அன்றும் கடன் கொடுக்க மற்றும் கடன் வாங்க ஆகாத திதிகள் ஆகும்.

தொகுப்பு : குருஜி ஆனந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தன வரவை அதிகரிக்கும் சித்தர் வழிபாடு

2024-02-26 18:06:13
news-image

தடைகளை அகற்றி தன வருவாயை அதிகரிக்கச்...

2024-02-25 21:22:54
news-image

யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

2024-02-24 14:29:42
news-image

நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

2024-02-23 15:56:41
news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51
news-image

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தெய்வ திருவுருவங்கள்

2024-02-05 17:10:36