(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை இரண்டு மடங்காக அதிகரிப்பதே தமது நிலைப்பாடு. அது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜகத்குமார சுமித்ராரச்சி எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மஹாபொல புலமைப் பரிசிலுக்கான நிதி லொத்தர் சீட்டு விற்பனை மூலமே கொள்ளப்படுகிறது. லொத்தர் சீட்டின் விலை ஒரேயடியாக 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டதனால் அதன் விற்பனையில் சற்று வீழ்ச்சி காணப்படுகின்றது. எனினும் படிப்படியாக அதன் விற்பனை தற்போது முன்னேறி வருகிறது.
மஹாபொல புலமைப் பரிசிலை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் அத்துலத் முதலியாகும். எவ்வாறாயினும் தற்போது வழங்கும் புலமைப் பரிசில் நிதி எந்த வகையிலும் போதாது. அதனை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
பல்கலைக்கழகங்கள் தொடர்பான விடயங்களை முன்னெடுப்பதற்காக உயர்கல்வி ஆணைக்குழு வொன்றை ஸ்தாபிப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணைக்குழுவில் அரசாங்க பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தனியான ஒழுங்குபடுத்தலும் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக தனியான ஒழுங்குபடுத்தலும் தொழிற் கல்வி தொடர்பில் தனியான ஒழுங்குபடுத்தலும் மேற்கொள்ளப்படும்.
இவை அனைத்து தொடர்பிலும் தர நிர்ணயம் மேற்கொள்வதற்கான தனியான நிறுவனம் ஒன்றும் அமைக்கப்படும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 5 அல்லது 10 வருடங்களில் உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM