ஹமாசின் தாக்குதல் திட்டம் குறித்து ஒரு வருடத்திற்கு முன்னரே தெரிந்திருந்த போதும் அலட்சியம் செய்த இஸ்ரேல் - நியுயோர்க் டைம்ஸ்

Published By: Rajeeban

01 Dec, 2023 | 12:56 PM
image

ஹமாஸ்தாக்குதலை மேற்கொள்ளவுள்ளமை குறித்து இஸ்ரேலிற்கு ஒருவருட காலத்திற்கு முன்னரே தெரிந்திருந்தது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாசின் தாக்குதல்கள் குறித்த திட்டங்களை ஒரு வருடத்திற்கு முன்னரே இஸ்ரேல் பெற்றுக்கொண்டிருந்தது என மின்னஞ்சல்களையும் விடயங்களை அறிந்தவர்களின் தகவல்களையும்  அடிப்படையாக வைத்து  நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

40 பக்க ஆவணமொன்று குறித்து தகவல் வெளியிட்டுள்ள நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்ட ஆவணம் தாக்குதல் எப்போது இடம்பெறும் என தெரிவிக்கவில்லை ஆனால் ஹமாஸ் மேற்கொள்ளவுள்ள தாக்குதல் குறித்து துல்லியமான தகவல்கள் அந்த ஆவணத்தில்  காணப்பட்டன என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அந்த விபரங்களை ஆராய்ந்த இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர்  ஹமாசினால் அவ்வாறான தாக்குதலை மேற்கொள்ள முடியாது என நிராகரித்தனர் எனவும் நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெரிச்சோ வோல் என்ற அந்த ஆவணம் காசாபள்ளத்தாக்கினை சூழவுள்ள பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட நிலைகளில் இருந்து தாக்குதல்கள் இடம்பெறலாம் என தெரிவித்திருந்தது என குறிப்பிட்டுள்ள நியுயோர்க்டைம்ஸ் ஹமாஸ் இஸ்ரேலின் நிலைகளை கைப்பற்றலாம் தளங்களை கைப்பற்றலாம் எனவும் தெரிவித்திருந்தது எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

அதனை ஹமாஸ் துல்லியமாக செய்தது என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெரிச்சோ வோல் ஆவணம் இஸ்ரேலிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தரப்பினர் மத்தியில் பரிமாறப்பட்டிருந்தது ஆனால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அதனை பார்த்தாரா என்பது தெரியவில்லை என நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32
news-image

உக்ரைன் யுத்தம் - ஏவுகணை தாக்குதலில்...

2024-02-22 10:51:12
news-image

கொவிட்தடுப்பூசிகளால் பல உடல்பாதிப்புகள் -சர்வதேச அளவில்...

2024-02-21 16:44:52
news-image

டெல்லி சலோ போராட்டம்: கண்ணீர் புகை...

2024-02-21 14:01:03
news-image

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் சிறுவர்கள்...

2024-02-21 12:02:00
news-image

காசாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோரும் பாதுகாப்பு...

2024-02-21 11:36:09