தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்., ராஜஸ்தானில் பாஜகவுக்கு வாய்ப்பு; ம.பி., மிசோரமில் இழுபறி - கருத்துக்கணிப்பு முடிவுகள்

01 Dec, 2023 | 11:53 AM
image

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள்  வெளியாகின. ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. தெலங்கானா, சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமையக்கூடும். மத்திய பிரதேசம், மிசோரமில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் சமபலத்துடன் உள்ளன. இவ்விரு கட்சிகளுக்கிடையே இழுபறி நீடிப்பதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும், பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பின்னடைவை சந்திக்கும். காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும். மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணி (மி.தே.மு) ஜோரம் மக்கள் முன்னணிக்கு (ஜோ.ம.மு) பெரும்பான்மை இடங்கள் கிடைப்பது கடினம். அந்த மாநிலத்தில் இழுபறி நீடிக்கக்கூடும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தரப் பிரதேசத்தில்குளத்தில் டிராக்டர் விழுந்து விபத்து:...

2024-02-24 15:46:03
news-image

240 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரேகன்...

2024-02-24 18:08:01
news-image

அலெக்ஸி நவால்னியின் மரணம் - ரஸ்ய...

2024-02-24 12:48:30
news-image

'தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?' -...

2024-02-24 09:43:06
news-image

‘சீதா’, ‘அக்பர்’ சர்ச்சை முடிவுக்கு வந்தது

2024-02-24 09:34:49
news-image

ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய...

2024-02-23 10:41:56
news-image

நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய தனியார்...

2024-02-23 10:45:52
news-image

மணிப்பூர் வன்முறைக்கு வித்திட்ட சர்ச்சை தீர்ப்பை...

2024-02-23 09:52:02
news-image

ஸ்பெயினில் வலென்சியா நகரில் தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய...

2024-02-23 05:53:23
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேலிய படையினரை விலக்குமாறு...

2024-02-22 17:11:14
news-image

இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு சிறை: மத்திய...

2024-02-22 16:57:57
news-image

டெல்லி போராட்டக்களத்தில் மேலும் ஒரு விவசாயி...

2024-02-22 11:26:32