சுவசெரிய அம்புலன்ஸ் சேவையாளர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

Published By: Vishnu

01 Dec, 2023 | 11:57 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 

சுவ செரிய இலவச அம்புலன்ஸ் சேவையை விமர்சித்தவர்களுக்கு மன்னிப்பு வழங்குகிறேன். இந்த சேவையில் உள்ளவர்கள் 24 மணித்தியாலங்களும்  அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகிறார்கள்.

ஆகவே அவர்களுக்கான கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும்  என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி  ஹர்ஷ டி சில்வா  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் அடிப்படையில் சுவ செரிய இலவச அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டது.இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போது பலர் தவறான விமர்சனங்களை முன்வைத்தார்கள், எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களுக்கு நான் மன்னிப்பு வழங்குகிறேன். இந்த சேவை தோல்வி என்று எவராலும் குறிப்பிட முடியாது.

சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்கு ஒரு நாளைக்கு மாத்திரம்  5300 தொலைபேசி அழைப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.முதல் அழைப்பிலேயே பொது மக்களுக்கு சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சுவ செரிய அம்புலன்ஸூக்குள்  684  பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன.

சுவசெரிய அம்புலன்ஸ் சேவையில் உள்ள அம்புலன்ஸ் வண்டிகள் ஒரு நாளைக்கு மாத்திரம் 24,692 கிலோமீற்றர் தூரம்  பயணிக்கின்றன.நகர புறங்கள் உட்பட கிராம புறங்களிலும் இந்த சேவை வினைத்திறனான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.

1461 சேவையாளர்களுக்கான கேள்வி காணப்படுகின்ற நிலையில் 1210 பேர் மாத்திரமே தற்போது சேவையில் உள்ளார்கள்.

ஆகவே  காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுவசெரிய சேவைத்திட்டத்தின் சேவையாளர்கள் 24 மணித்தியாலங்களும் அர்ப்பணிப்புடன் சேவையில் ஈடுபடுகிறார்கள்.ஆகவே அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது சுவசெரிய அம்புலன்ஸ் சேவை பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருந்தது.எரிபொருள் விநியோகம்,உள்ளிட்ட இதர தேவைகளில் இச்சேவைக்கு முன்னுரிமை வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தினேன்.அவர் எமது கோரிக்கையை நிறைவேற்றினார் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய...

2024-02-24 18:32:34
news-image

உத்தேச தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்...

2024-02-24 18:10:46
news-image

வீரமிக்க பெண்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு...

2024-02-24 17:54:20
news-image

இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது...

2024-02-24 18:22:57
news-image

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்:...

2024-02-24 17:16:25
news-image

“நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" ஐக்கிய குடியரசு...

2024-02-24 15:53:29
news-image

சர்ச்சைக்குரிய வெள்ளையானவர்களிற்கான களியாட்ட நிகழ்வு இரத்து...

2024-02-24 15:41:55
news-image

இந்திய - இலங்கை கடல் எல்லையில்...

2024-02-24 15:21:40
news-image

ஐஸ் போதைப்பொருள் பாவனை: பொலிஸ் கான்ஸ்டபிள்...

2024-02-24 15:45:47
news-image

குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று...

2024-02-24 15:08:00
news-image

உக்குவாவின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர்...

2024-02-24 14:32:09
news-image

கழிவுத் தேயிலையை வீட்டுக்கு எடுத்து செல்ல...

2024-02-24 13:37:39