ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி குறித்து பேசுகின்றோம் ஆனால் சில நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டின் மக்கள் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூர முயன்றார்கள் - வடக்குகிழக்கில் - ஆனால் அவர்களால் அது முடியவில்லை என மனித உரிமை சட்டத்தரணி பவானிபொன்சேகா தெரிவித்துள்ளார்
தொலைக்காட்சி நிகழ்வொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி குறித்து பேசுகின்றோம் இந்த நிகழ்ச்சி கவனம் செலுத்தும் விடயமாக இதுவே உள்ளது.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டின் மக்கள் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூர முயன்றார்கள் - வடக்குகிழக்கில் - ஆனால் அவர்களால் அது முடியவில்லை.
மக்களால் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூரமுடியவில்லை என்றால் அதுவும் இந்த நாட்டில் ஒரு விவகாரம்தான் -
இந்த நாட்டில் அனைவரும் சமமானவர்களா? யார் இந்த மக்களிற்காக குரல்கொடுக்கின்றனர்.
ஆகவே நான் என்ன சொல்கின்றேன் என்றால் ஊழல் குறித்து நாங்கள் கவனம் செலுத்தவேண்டும்,ஆட்சி குறித்து நாங்கள் பேசவேண்டும்,நாங்கள் மனித உரிமைகள் குறித்து பேசவேண்டும் நாங்கள் சட்டத்தின் ஆட்சி குறித்து பேசவேண்டும், நாங்கள் நல்லிணக்கம் குறித்தும் பேசவேண்டும்.
சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் என நாங்கள் பேசுகின்றோம்,யுத்தம் முடிவடைந்து அடுத்தவருடத்துடன் 15 வருடங்களாகின்றன ,மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை கண்டுள்ளோமா?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM