(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டில் அனைத்து துறைகளிலும் இடம்பெறுகின்ற கேள்வி மனுக்கோரல் முறைகள் ஊழல் மோசடிமிக்கதாகும்.
அதனால் இந்த முறை முற்றாக மாற்றப்பட வேண்டும். அத்துடன் என்னை வீழ்த்தவே சுகாதார அமைச்சு வழங்கப்பட்டது. ஆனால் அதனை நான் சிறந்த முறையில் முன்னெடுத்ததாலே நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகினேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
என்னை வீழ்த்துவதற்கே 2010இல் சுகாதார அமைச்சை எனக்கு வழங்கினார்கள். ஆனால் சுகாதார அமைச்சை பொறுப்பெற்று அதனை முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
இதனால் சிறந்த சுகாதார சேவைக்காக எமக்கு பல விருதுகள் கிடைக்கப்பெற்றன. அதேநேரம் நான் சுகாதார அமைச்சை சிறந்த முறையில் முன்னெடுத்து சென்றதாலே எனக்கு நாட்டின் ஜனாதிபதியாக முடிந்தது.
2015இல் நான் ஜனாதிபதியான காலத்தில் நாட்டில் 40 வருடங்களுக்கும் அதிக காலம் மருத்துவ துறையில் பேசப்பட்டு வந்த கலாநிதி சேனக்க பிபிலேயின் கொள்கைக்கு அமைய மருந்து கொள்கையை அமைத்து பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டேன். ஆனால் தற்போது அந்த மருந்து கொள்கைக்கு என்ன நடந்தது என தெரியாது.
தரம் குறைந்த மருந்து பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் ஏனைய மருந்து வகைகள் தொடர்பில் சிறந்த தீர்வுகள் அந்த சட்டத்தில் இருக்கின்றன. அதனால் தற்போது வீழ்ச்சியடைந்து செல்லும் சுகாதார துறையை பாதுகாக்க சேனக்க பிபிலே கொள்கைக்கு அமைய தயாரிக்கப்பட்ட மருந்து கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அத்துடன் வைத்தியர்களுக்கு பற்றாகுறை தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 40க்கும் மேற்பட்ட பிரதேச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக செய்திகளின் மூலம் அறியக்கிடைத்தது.
பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களே இவ்வாறு கஷ்டப்பிரதேசங்களில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சென்று பணி புரிந்து வருகின்றனர். ஆனால் 1996இல் இவர்களின் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இவர்களே இதனை மேற்கொண்டது.
மேலும் சுகாதாரத்துறையில் பல்வேறு பிரிவுகளுக்கு கேள்வி மனுக்கோரல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வாெரு கேள்வி மனுக்கோரல்களும் பல கோடி ரூபாவுக்கே இடம்பெறுகிறது. ஆனால் சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டில் இடம்பெறுகின்ற அதிகமான கேள்வி மனுக்கோரல்கள் அதிக ஊழல் மோசடிமிக்கதாகும்.
அதனால் இந்த கேள்வி மனுக்கோரல் முறை முற்றாக மாற்றப்படவேண்டும். எனது காலத்தில் மெட்ராஸ் நகரில் இடம்பெற்ற கேள்வி மனுக்கோரல் முறை தொடர்பாக ஆராய ஒரு குழுவை அனுப்பினேன். ஆனால் தற்போது அது செயற்படுவதில்லை.
அத்துடன் நாட்டில் நோயாளர் அதிகரிக்கும்போது வைத்தியசாலைகள் மற்றும் ஏனஎைய உபகரணங்களை அதிகரிப்பதற்கு முன்னர் நோய் நிவாரண நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நோய் நிவாரண பிரிவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM