நயனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய விக்னேஷ்!

30 Nov, 2023 | 06:20 PM
image

39வது பிறந்த நாளைக் கொண்டாடி, இரண்டு வாரங்களின் பின், நயன்தாராவை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா தனது 39வது பிறந்த நாள் நவம்பர் 18ஆம் திகதி கணவர் மற்றும் பிள்ளைகளுடன் கொண்டாடினார். ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து, இன்று விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பிறந்த நாள் பரிசை அளித்து அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

விக்னேஷ் பரிசளித்தது, இலங்கை மதிப்பில் சுமார் பத்து கோடி ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள ‘மேபெட்ச்’ ரக அதி ஆடம்பர சொகுசு பென்ஸ் கார் ஒன்றைத்தான்!

இதையடுத்து, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் “அழகியே... வருக வருக....” என்றும் “பிறந்த நாளுக்காக இனிப்பான பரிசைத் தந்ததற்கு நன்றி” என்று விக்னேஷ் சிவனுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right