லோகேஷின் ‘ஃபைட் க்ளப்’!

30 Nov, 2023 | 06:16 PM
image

அதிரடி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் தலைப்பு, ஏற்கனவே அறிவித்தபடி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்துக்கு ‘ஃபைட் க்ளப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘உறியடி’ இயக்குநர் நடிகர் விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தின் முதற்பார்வையும் நேற்று (29) வெளியிடப்பட்டது. இதில், விஜயகுமார் ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுடன், சண்டைக்குத் தயாராக நிற்பது போன்ற படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பில், 1999ஆம் ஆண்டு ஹொலிவுட்டில் வெளியான உளவியல் மர்மங்கள் நிறைந்த படம் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக விளங்குகிறது. இந்தப் படத்தில் பிராட் பிட் மற்றும் எட்வர்ட் நோர்ட்டன் நடித்திருந்தனர். இந்தப் படத்தை டேவிட் ஃபின்ச்சர் இயக்கியிருந்தார்.

படத்தின் தலைப்பு மட்டுமா, அல்லது அதே படத்தின் தமிழ் சாயலாக லோகேஷின் இந்தப் படம் இருக்குமா என்பது டிசம்பர் மாத இறுதியில் தெரிந்துவிடும். ஏனெனில், இந்தப் படத்தை டிசம்பர் விடுமுறையின்போது வெளியிடத் தீர்மானித்துள்ளனர்.

படத்தின் பெயருக்கேற்றபடி, சண்டைக் காட்சிகள் நிறைந்த அதேநேரம், முழுக் குடும்பத்துக்கும் ஏற்ற படமாக இது இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right