(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை ரக்பி சங்கம் ஏற்பாடு செய்துள்ள இலங்கை மேஜர் லீக் ரக்பி தொடர் 2023 (Sri lanka Major Rugby League Tournament 2023) நாளை வெள்ளிக்கிழமை (01) ஆரம்பமாகவுள்ளது.
நிப்போன் பெயின்ட் அனுசரணையுடன் நடத்தப்படுகின்ற இப்போட்டித் தொடரில் கண்டி ரக்பி கழகம், சீ.ஆர். & எப்.சீ. ரக்பி கழகம், ஹெவ்லொக் ரக்பி கழகம், பொலிஸ் ரக்பி கழகம், இராணுவ ரக்பி கழகம், சீ.எச்.எப்.சீ. ரக்பி கழகம், கடற்படை ரக்பி கழகம், விமானப் படை ரக்பி கழகம் என நாட்டின் முன்னணி 8 ரக்பி கழகங்கள் பங்கேற்கின்றன.
ஏழு வாரங்களுக்கு நடைபெறுகின்ற இந்த ரக்பி போட்டித் தொடரானது, அடுத்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி நிறைவடையும்.
ஆண்கள் ரக்பி தொடரைப் போலவே, பெண்கள் மேஜர் ரக்பி லீக் போட்டித் தொடரும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் சீ.ஆர். & எப்.சீ, இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய 4 அணிகள் பங்கேற்கவுள்ளன.
"கிண்ணம் வெல்வது, பதக்கங்கள் வெல்வது, போட்டித் தொடர் கைப்பற்றுவதை தாண்டியும் விளையாட்டு உணர்வுமிக்க சிறந்த விளையாட்டு வீரராகவும் சிறந்த பிரஜையாகவும் இருப்பதே மிகவும் முக்கியமாகும். ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து, சிறந்த விளையாட்டு ஆற்றல்களை வெளிப்படுத்துகின்ற சிறந்த வீரராக இருப்பதே சிறப்பான விடயமாகும்.
வீரர்கள் அனைவரும் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினாலும், போட்டி மத்தியஸ்தர்களின் கட்டுப்பாடுகளுக்கும் ரக்பி விதிகளுக்கு உட்பட்டு விளையாட வேண்டியது மிகவும் அவசியமாகும் என இலங்கை ரக்பி சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொலிஸ் அணிக்கு மொஹான் விமலரட்ணவும், கடற்படை அணிக்கு திலின வீரசிங்கவும், ஹெவ்லொக் அணிக்கு அஸ்மிர் பாஜுடீனும், விமானப்படை அணிக்கு பராக்ரம ரத்நாயக்கவும், இராணுவ அணிக்கு ஹசான் பண்டாரவும், சீ.ஆர். & எப்.சீ. அணிக்கு சுஹிரு என்தனியும், கண்டி அணிக்கு லவங்க பெரேராவும், சீ.எச்.எப்.சீ. அணிக்கு அவன்த லீயும் அணித்தலைவர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM