மொட்டு திருடர்களைக் கொண்டு அரசியல் செய்யப்படவில்லை எனவும், நாட்டை வங்குரோத்து செய்தது எதிர்க்கட்சியே எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார்.
கடந்த இரண்டு வாரங்களாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சியினர் தம்முடைய தேவைக்குப் பயன்படுத்தி விட்டு இல்லாமல் ஆக்கி விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியினர் அவர்தான் பொது வேட்பாளர் என்ற சந்தேகத்தில் கலக்கமடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
27 (2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக நாடாளுமன்ற நேரத்தை வீணடிப்பதாக குற்றம் சுமத்தியுள்ள போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து நடந்த உரையாடல் பின்வருமாறு:
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ) - கௌரவ சபாநாயகர் அவர்களே, நேரம் குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். தற்போது, அடிப்படை பணிகள் தொடங்கி, 50 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இரு தரப்பிலும் எடுக்கப்பட்ட பேச்சுகளின் விகிதத்திற்கு ஏற்ப அந்த நேரத்தைக் குறைத்து, இதை முகாமைத்துவம் செய்து தாருங்கள்.
நேற்றைய தினமும் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எதிர்க்கட்சி அமைப்பாளருக்கும் எனக்கும் இந்த பிரச்சினையை சந்திக்க வேண்டியிருந்தது. அது போல குறைக்க செயற்படுங்கள். அடிக்கடி கேட்பது மதிய உணவுக்குத்தான். அந்த அரை மணி நேரம் கொடுக்கும்போது கூட 14ம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை 552 நிமிடங்களை செலவிட்டுள்ளோம்.
அதில் 204 நிமிடங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பேசியுள்ளார். பின்னர் அவர்கள் காலையில் முழு நேரமும் சந்திக்கிறார்கள். மதிய உணவு நேரம் கூட கேட்கிறார்கள். சாப்பாட்டுக்கு நேரம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. குறைக்கும்போது இருபக்கமும் குறையுங்கள். அதிகம் எடுத்தவர்களிடமிருந்து குறையுங்கள். இல்லாவிட்டால் இங்கே முகாமைத்துவம் செய்ய முடியாமல் போகும்.
பாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு ஆளுங்கட்சி அமைப்பாளரிடமும், எதிர்க்கட்சி அமைப்பாளரிடமும் உள்ளது. அது கொடுக்கப்பட்டால், அதை நிர்வகிக்க இருபுறமும் வேலை செய்யுங்கள். அல்லது காலையில் முழு நேரத்தையும் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் இரு தரப்பிலும் எடுக்கும் நேரத்தை குறைக்க பரிந்துரைத்தேன்.
லக்ஷ்மன் கிரியெல்ல (ம.ஐ.ச) - நாடு வங்குரோத்து நிலையில் இருக்கும் போது பேசுவதற்கு எத்தனை விடயங்கள் உள்ளன?
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ) - நாடு வங்குரோத்து என்று காலை முதல் கோஷமிட்டு வருகிறார். கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை நன்றாகப் பயன்படுத்தி விட்டு பின்பு இல்லாமல் ஆக்கி பொது வேட்பாளர் என்று கூறிவிட்டு பிறகு அவர்கள் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறுகின்றனர். ஈஸ்டர் தாக்குதல் இன்று காலைதொடங்கியது ஈஸ்டர் தாக்குதல். இப்போது இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதம் குறித்து கலந்துரையாட உரிய நேரம் இழக்கப்படுகிறது. நீங்கள் இதை முகாமைத்துவம் செய்து தாருங்கள்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரிடம்), உங்களைப் போன்ற மூத்த தலைவர் இந்த நேரத்தை வீணடித்தால், நாங்கள் எவ்வாறு சபையில் பணியாற்ற முடியும். வேண்டுமென்றே இந்த அழிவைச் செய்கிறீர்கள். அது மிகவும் தவறு.
லக்ஷ்மன் கிரியெல்ல (ம.ஐ.ச) - நாங்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறார். நாடு வங்குரோத்து அடந்தால் எத்தனை விஷயங்கள் பேச இருக்க்கின்றது?
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன - இப்போது இதை சுமார் இருபத்தைந்து தடவைகள் கூறி விட்டீர்கள் லக்ஷ்மன் கிரியெல்ல (ம.ஐ.ச) - நான் எவ்வளவு சொன்னாலும் இதற்கெல்லாம் விளங்காது.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - இவர்கள்தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு உள்ளாக்கினார்கள். இந்த திருடர்களுடன் மொட்டு மக்கள் அரசியல் செய்யவில்லை. அதனால்தான் ரொஷான் ரணசிங்கவை அந்தப் பக்கம் அனுப்பினோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM