சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்காதீர்கள் - வடிவேல் சுரேஷ்

30 Nov, 2023 | 05:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள அரச வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதை காட்டிலும் அவற்றை மூடுவதற்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்க வேண்டாம். மலையகத்தில் நிலவும் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்  சுகாதார அமைச்சுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

சுகாதார துறையின் தேசிய கொள்கை மலையகத்திலும் பின்பற்றப்படுகிறதா? என்ற பிரச்சினை நீண்டகாலமாக நிலவுகிறது.

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றிருந்த நிலையிலும் தற்போது அந்த வைத்தியசாலைகளில் பாரிய வளப்பற்றாக்குறை காணப்படுகிறது.

2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரத்தினபுரி, பதுளை, கேகாலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 51 தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தாலும் பிற்பட்ட காலப்பகுதிகளில் பெரும்பாலான வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்காதீர்கள் என்பதை அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.

பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் வளப்பற்றாக்குறையால் எமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பதுளை கெட்ட புலா பகுதியில் தரமான வைத்தியசாலை உருவாக்கப்பட்டு, நிபுணத்துவ வைத்தியர்கள் சேவைக்கமர்த்தப்பட வேண்டும் .

மலையகத்தில் தாய் - சேய் மரணம் அண்மைகாலமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.மலையகத்தில் வீதிகள் சீரமைக்கப்படாத காரணத்தால் கர்ப்பிணி தாய்மார்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதும் பாரிய பிரச்சினையாக உள்ளது.

ஆகவே சுகாதார அமைச்சுக்கு சொற்ப அளவு தான் நிதி ஒதுக்கப்படுகிறது.அந்த நிதியை பாரபட்சமில்லாமல் மலையக சுகாதார சேவைக்கு வழங்குமாறு வினையமாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழர்கள் இருவரை நாடு கடத்திய...

2024-02-24 18:32:34
news-image

உத்தேச தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்...

2024-02-24 18:10:46
news-image

வீரமிக்க பெண்களை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு...

2024-02-24 17:54:20
news-image

இந்திய மீனவர்களின் நியாயப்படுத்தலை ஏற்க முடியாது...

2024-02-24 18:22:57
news-image

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்:...

2024-02-24 17:16:25
news-image

“நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை" ஐக்கிய குடியரசு...

2024-02-24 15:53:29
news-image

சர்ச்சைக்குரிய வெள்ளையானவர்களிற்கான களியாட்ட நிகழ்வு இரத்து...

2024-02-24 15:41:55
news-image

இந்திய - இலங்கை கடல் எல்லையில்...

2024-02-24 15:21:40
news-image

ஐஸ் போதைப்பொருள் பாவனை: பொலிஸ் கான்ஸ்டபிள்...

2024-02-24 15:45:47
news-image

குருணாகல் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று...

2024-02-24 15:08:00
news-image

உக்குவாவின் கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர்...

2024-02-24 14:32:09
news-image

கழிவுத் தேயிலையை வீட்டுக்கு எடுத்து செல்ல...

2024-02-24 13:37:39