நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டம்

Published By: Digital Desk 3

30 Nov, 2023 | 03:25 PM
image

பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி, அதற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா, கண்டி, காலி மற்றும் தியதலாவை ஆகிய நகரங்களில் உள்ள புராதன பெறுமதிக்க தபால் நிலையங்களை, குறுகிய கால இலாபத்துக்காக விற்பனை செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும்.  

தபால் திணைக்களத்தில் நிலவும் ஆளணி பற்றாக்குறைய நிவர்த்தி செய்யப்பட வேண்டும். வரவு - செலவுத் திட்டம் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே போராட்டம் இடம்பெற்றது.

"2016 முதல் தபால் திணைக்களத்துக்கு ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை. இதனால் திணைக்களத்தில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, புதிய நியமனம் வழங்கப்பட வேண்டும்." என்று நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.

"தற்போதைய வாழ்க்கைச்செலவுக்கமைய 10 ஆயிரம் ரூபா போதாது, எனவேதான் 20 ஆயிரம் ரூபா கோரப்படுகின்றது." எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மஹிந்தவை படுகொலை செய்யவா அவரது பாதுகாப்பு...

2024-12-13 21:52:27
news-image

இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை...

2024-12-13 21:54:16
news-image

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் குறித்து...

2024-12-13 17:12:22
news-image

பிரதி சபாநாயகர் உட்பட மேலும் பலர்...

2024-12-13 17:34:04
news-image

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம்...

2024-12-13 21:11:23
news-image

கங்காராம விகாரைக்கு அருகில் உணவகம் ஒன்றில்...

2024-12-13 20:49:02
news-image

பங்காளிக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டுக்கமையவே தேசியப்பட்டியல் நியமனம்...

2024-12-13 17:10:04
news-image

எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர்...

2024-12-13 20:27:04
news-image

எல்ல-வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளது - அனர்த்த...

2024-12-13 20:16:31
news-image

இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

2024-12-13 19:50:29
news-image

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால்...

2024-12-13 19:08:44
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 300,162 இலங்கையர்கள்...

2024-12-13 18:44:18