இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியுஸ் பங்களதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

 எவ்வாறாயினும் பங்களதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் இவர் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் அணியின் தலைவராக ஹேரத் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியுஸ் உபாதைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.