'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023' கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சம்பியனானது கொழும்பு தெற்கு அணி

30 Nov, 2023 | 01:51 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட 'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023' கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு வடக்கு அணியை 86 ஓட்டங்களால் வெற்றியீட்டிய கொழும்பு தெற்கு அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. 

15 வயதுக்குட்பட்ட பிரீமா யூத் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு எம்.சீ.ஏ. (Mercantile Cricket Association) கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (29) நடைபெற்றது. 

இப்‍போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த கொழும்பு தெற்கு அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் ரெஹான் பீரிஸ் 129 ஓட்டங்களையும், லஹிரு சந்தகன் 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜனித் நெத்சர, தசித் பெரேரா, லஹிரு லக்மால் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கொழும்பு வடக்கு அணி 47.1 ஓவர்களில் 170 ஓட்டங்களை மாத்திரம் குவித்து 86 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பில் சதீஷ் சில்வா 47 ஓட்டங்களையும், லஹிரு லக்மால் மாத்திரம் 28 ஓட்டங்களை குவித்தார். பந்துவீச்சில் ஜனுல் தம்ஹிரு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இறுதிப் போட்டியின் நாயகனாக ரெஹான் பீரிஸ் (கொழும்பு தெற்கு அணி) தெரிவானதுடன், தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக யசிரு லக்சானும் (காலி அணி), தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக ஹிமாரு தேஷானும் (கொழும்பு தெற்கு அணி) தெரிவாகினர். 

போட்டிச் சுருக்கம்

15 வயதுக்குட்பட்ட கொழும்பு தெற்கு அணி 256/8 (50 ஓவர்கள்)

ரெஹான் பீரிஸ் 129, லஹிரு சந்தகன் 40, செனித் நெத்சர 2/43, தசித் பெரேரா 2/53, லஹிரு லக்மால் 2/54  

15 வயதுக்குட்பட்ட கொழும்பு வடக்கு அணி

சதீஷ் சில்வா 47, லஹிரு லக்மால் 28, யெனுல தன்த்த நாராயண 23, ஜனுல் தம்ஹிரு 2/42

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்