(எம்.நியூட்டன்)
மலையகம் 200ஐ முன்னிட்டு 'யாழில் மலையகத்தை உணர்வோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் வாழ்வு, சவால்கள், அடைவுகள் மற்றும் நிலைமை என்பவற்றை பிரதிபலிக்கும் நடமாடும் அருங்காட்சியகம், கண்காட்சி, கலை நிகழ்வுகள், ஆவண திரையிடல், அரசியல், புலமை பகிர்வு மற்றும் ஆற்றுகை நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (30) யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் குயின்ரஸ் வருகை தந்திருந்தார்.
மேலும், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம், முன்னாள் அரசாங்க அதிபர் வேதநாயகன், தந்தை செல்வா அரங்க உறுப்பினர்களோடு பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இன்று தொடங்கி எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையான நான்கு நாட்கள் இடம்பெறும் இந்நிகழ்வில் வடக்கு வாழ் மக்கள் கலந்துகொள்ள கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் யாழ். சிவில் சமூக நிறுவனங்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM