அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் மாற்றமில்லை இரண்டாம் தவணை கடன் அடுத்த மாதம் கிடைக்கும் - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Digital Desk 3

30 Nov, 2023 | 12:42 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட இரண்டாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்  வெற்றிப்பெற்றுள்ளன. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அடுத்த மாதமளவில் இரண்டாம் கட்ட கடன் தொகை கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கிறோம். நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் வங்குரோத்து நிலையில் இருந்து வெகுவிரைவில் மீள முடியும் என நிதி இராஜாங்க  அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்துக்கு    சர்வதேச கடன் வழங்குநர் குழு  இணக்கப்பாட்டளித்துள்ளதை  பாரியதொரு வெற்றியாக கருதுகிறோம்.இலங்கையின் பிரதான கடன் வழங்குநர்களான இந்தியா,ஜப்பான்,பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சீனாவும் கடன் மறுசீரமைப்புக்கு சார்பான நிலைப்பாட்டில் உள்ளதை வரவேற்கிறோம்.

சகல கடன் வழங்குநர்களும் சமமான நிலையில் மதிக்கப்படுவார்கள்,எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புவெற்றிப்பெறும் நிலையில் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை நீடிக்கப்பட்ட கடன் தவணையுடன் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்தும் போது ஏற்பட்ட காலதாமதத்தால் இரண்டாம் தவணை நீடிக்கப்பட்ட கடன் கிடைப்பனவு தாமதமானது. இதனை எதிர்க்கட்சியினர் தமது அரசியல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.

நீடிக்கப்பட்ட இரண்டாம் தவணை கடனை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள்  வெற்றிப்பெற்றுள்ளன. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு திட்டங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அடுத்த மாதமளவில் இரண்டாம் கட்ட கடன் தொகை கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கிறோம். நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் வங்குரோத்து நிலையில் இருந்து வெகுவிரைவில் மீள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49
news-image

யாழ். புதிய பஸ் நிலைய போக்குவரத்து...

2024-03-01 19:05:59