abc
இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் காரணமாக எரிபொருள் முற்றாக தீர்ந்துபோயுள்ள நிலையில் பொதுமக்கள் பணயத்திற்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கும் கழுதை வண்டில்களை பயன்படுத்திவருகின்றனர்.
கான் யூனிசில் இடம்பெற்ற குண்டுவீச்சில் தனது வீட்டை இழந்த முகமட் அல் நஜாரின் பிரதான போக்குவரத்து சாதனமாக கழுதை வண்டி மாறியுள்ளது.
குசா என்ற பகுதியில் அவர் தற்போது வசிக்கின்றார்,நடமாடுவது கடினம் இதனால் நாங்கள் கழுதை வண்டிகளை பயன்படுத்துகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது பகுதியான கான் யூனிசிற்கு கழுதை வண்டியில் செல்வதற்கு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் எடுக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கழுதை வண்டி மிகவும் மெதுவாக நகர்வதால் காசாவின் யுத்த அழிவுகளை தெளிவாக பார்க்க முடிகின்றது . அழிக்கப்பட்ட ஒரு இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு கழுதை வண்டி செல்கின்றது.
சில கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன,உடைந்த கொன்கிறீட் அல்லது இரும்பு கம்பிகுவியலாக காணப்படுகின்றன - ஆங்காங்கே சிதறுண்டுகிடக்கும் உடைகளும் பொருட்களும் மாத்திரமே அங்கு காணக்கூடிய வண்ணமயமான பொருட்களாக உள்ளன.
விசித்திரமாண கோணங்களில் வளைந்த நெளிந்த இருப்புதுண்டுகள் தகரங்களை காணமுடிகின்றது.எங்கும் குப்பைகளும் இடிபாடுகளும் காணப்படுகின்றன.
வீதியில் வாகனங்கள் எவற்றையும் பார்க்க முடியவில்லை,எப்போதாவது ஸ்கூட்டரை காணமுடிகின்றது - துவிச்சக்கரவண்டிகளே அதிகளவில் காணப்படுகின்றன.
பலபகுதிகளில் வீதிகளில் இருமருங்கிலும் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன,.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM