59ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் திருமறைக் கலாமன்றம் : யாழில் இரத்த தானம், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு!

30 Nov, 2023 | 01:48 PM
image

திருமறைக் கலாமன்றம் அதன் கலைப்பணியில் 58 ஆண்டுகளை நிறைவு செய்து, 59ஆவது ஆண்டில் கால் பதித்திருப்பதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (டிச. 03) பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி, வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இல.17, மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணம்  என்ற முகவரியில் அமைந்துள்ள மன்றத்தின் கலைஞானசுரபி தியான இல்லத்தில் நன்றி வழிபாடு இடம்பெறும். 

அதனை தொடர்ந்து, மு.ப. 10 மணிக்கு மன்ற அலுவலகத்தின் அருகில் இல.238, பிரதான வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள கலைத்தூது மணிமண்டபத்தில் இரத்த தானம் வழங்கல் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் மாலை 4 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். 

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ். பிராந்திய உதவிப் பணிப்பாளர் கி.கந்தவேள்  சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளின் நடனங்கள், அண்மையில் திருமறைக் கலாமன்றத்தால் நடத்தப்பட்ட யாழ்ப்பாண தென்மோடி கூத்து மரபு, ஓராள் ஆற்றுகைப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு, கலைஞர் கெளரவிப்பு என்பவற்றோடு, திருமறைக் கலாமன்ற கலைஞர்கள் வழங்கும் 'நொண்டி நாடகம்' தென்மோடி நாட்டுக்கூத்தும் இடம்பெறவுள்ளன. 

இந்நிகழ்வுகளில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு திருமறைக் கலாமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன்...

2024-02-24 16:18:21
news-image

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம் 

2024-02-24 15:52:57
news-image

வவுனியாவில் 'மேழி 70' விழாவும் நூல்...

2024-02-24 10:36:36
news-image

யாழ். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய...

2024-02-23 15:57:19
news-image

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவாஞ்சலி 

2024-02-23 15:57:40
news-image

சுமத்தி குழுமத்தின் ஸ்தாபகரான யூ.டபிள்யூ. சுமத்திபாலவின்...

2024-02-23 22:06:47
news-image

கொழும்பு வூல்பெண்டால் மகளிர் பாடசாலைக்கு தளபாடங்கள்...

2024-02-22 22:30:47
news-image

தொழில்நுட்ப வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா

2024-02-22 19:04:24
news-image

மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

2024-02-22 17:12:13
news-image

பிரபல சித்தார் இசைக் கலைஞர் பிரதீப்...

2024-02-21 22:34:47
news-image

மலையகம் 200ஐ முன்னிட்டு கலை இலக்கிய ...

2024-02-21 19:26:35
news-image

'பாடுவோர் பாடலாம்' இசைப்போட்டி ஹட்டனில் வெற்றிகரமாக...

2024-02-21 16:52:47