வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவு செய்வோம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதி

Published By: Digital Desk 3

30 Nov, 2023 | 02:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவு செய்வோம். இதுவரை 148,848 வீடுகள் கட்டப்பட்டு மீள்குடியேற்றப்பட்டுள்ளன என அரச தரப்பு பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (29) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான  ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கின் அபிவிருத்தி குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். 3 வருடகால யுத்தம் முடிவடைந்த பின்னர், போரினால் அழிந்துபோன வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வை மீட்டெடுக்க வடக்கு வசந்தம், கிழக்கு நவோதயம் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. யுத்த வெற்றியினால், அப்பகுதி மக்களின் ஆதரவு எமக்கு இல்லையென்றாலும், அந்த மக்களுக்கு நாம் அநீதி இழைக்கவில்லை. 

யுத்த மோதல்களினால் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் செயற்பட்டது. அதன்படி இதுவரை 148,848 வீடுகள் கட்டப்பட்டு மீள்குடியேற்றப்பட்டுள்ளன. 1,700 வீடுகளின் பணிகள் முடிக்கப்படவில்லை. இதில் இதுவரை 1,104 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 1,665 வீடுகளை கட்டத் தொடங்கினோம்.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக 1,500 மில்லியன் ரூபாவும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக மேலும் 500 மில்லியன் ரூபாவும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேவையான நிதி ஒதுக்கீடு என்று நான் நம்புகிறேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.

2027ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த நாட்டை கண்ணிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவதற்கான திட்டங்களைத் தயாரித்துள்ளோம். இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான இறுதி மூலோபாய திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 204 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டன. இன்னும் 15 சதுர கிலோமீற்றர் நிலத்தில் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக வெளிநாட்டு உதவிகளை பெற்றுள்ளோம். வெளிநாட்டு நன்கொடையாளர்களுக்கு இலங்கையின் வேலைத்திட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளது.  

1985ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின்  போரினால் முற்றாக அழிந்த யாழ்ப்பாண நகர மண்டபக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்குத் தேவையான ஒதுக்கீடுகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் கட்டம் 1 நிர்மாணத்தை முடிக்க எதிர்பார்க்கிறோம்.

பூநகரி நகரை அபிவிருத்தி செய்வதற்கான அவசர வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பூநகரி  நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரீன் கோட்டையைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பகுதியின் அபிவிருத்தி மற்றும் பூநகரி  சந்தை மற்றும் பிற உள்கட்டமைப்புகளின் அபிவிருத்தி நடந்து வருகிறது.

கடந்த காலங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வுகளை வழங்குவதற்கும் நாங்கள் செயற்பட்டோம். கிளிநொச்சி,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

அவற்றில் 25 ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25 அலகுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த வருடம் இதற்காக செலவிடப்பட்ட தொகை 11 மில்லியன் ரூபா. வடக்கு மற்றும் கிழக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபாவில் மேலும் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் 25,000 வீடுகளை இலக்காகக் கொண்டு குறித்த வீடுகளுக்கு சோலார் பெனல்கள் பொருத்தும் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது மின்சார அமைச்சுடன் கலந்துரையாடியதன் பின்னர்  அடுத்த வருடத்திற்குள் அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 25,000 வீடுகளில் வடகிழக்கில் சோலார் பெனல்களை நிறுவும் திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தில் மேலதிக வகுப்புக்களுக்கு தடை...

2024-03-01 02:28:09
news-image

வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்களின்...

2024-03-01 02:04:26
news-image

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின்...

2024-03-01 01:15:03
news-image

சபாநாயகரின் தீர்மானம் பிழை என்றால் நீதிமன்றம்...

2024-02-29 23:54:44
news-image

சிவாஜிலிங்கத்துக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்ட வழக்கை...

2024-02-29 21:51:35
news-image

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் சட்டவாட்சிக்கு...

2024-02-29 23:03:12
news-image

மன்னாரில் 53 ஆயிரம் போதை மாத்திரைகள் ...

2024-02-29 21:52:22
news-image

சந்தேகத்திற்கிடமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட...

2024-02-29 21:54:10
news-image

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவர...

2024-02-29 21:55:44
news-image

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024-02-29 21:52:44
news-image

கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்துக்கு தயங்க...

2024-02-29 21:49:28
news-image

மலைப் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டம் விரிவுபடுத்தப்படும்...

2024-02-29 21:48:58